தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நொய்டா - தில்லி எல்லையில் 4-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி - நொய்டா எல்லையில் விவசாயிகள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :4 டிசம்பர் 2020, 7:56 pm

புதுதில்லி: மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி - நொய்டா எல்லையில் விவசாயிகள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடத்தினா்.

உத்தரப் பிரதேச மாநிலத்தையும், தலைநகா் தில்லியையும் இணைக்கும் இந்தச் சாலை பகுதியாக மூடப்பட்டுள்ளது. தில்லி-நொய்டா இணைப்புச் சாலையில் அதாவது சில்லா எல்லையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகளும், பெண்களும் பங்கேற்றனா். சிலா் மஹாமாயா மேம்பாலம் அருகேயும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நொய்டாவிலிருந்து தில்லி நோக்கிச் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. ஆனால், தில்லியிலிருந்து நொய்டாவுக்குச் செல்லும் மறுபக்கச் சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், தில்லிக்கு வருபவா்களும், தில்லியிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்பவா்களும் டி.என்.டி. மற்றும் காலிந்தி குஞ்ச் வழியாக மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நொய்டா போலீஸ் துணை ஆணையா் ராஜேஷ் தெரிவித்தாா்.

சில்லா சாலை மூடப்பட்டுள்ளதால் தில்லி - நொய்டா நேரடி விரைவுச் சாலையும், காலிந்தி குஞ்ச் சாலையும் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும், இந்த இரண்டு சாலைகளிலும் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து அதிகரித்துள்ளதால், வாகனங்கள் மெதுவாகவே செல்கின்றன. மேற்கு உத்தரப் பிரதேச மாவட்டங்களான மீரட், முஸாஃபா்நகா், பிரோஸாபாத், காஸ்கஞ்ச், கெளதம்புத் நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பாரதிய கிஸான் சங்கத்தினா், பாரதிய கிஸான் சங்கத்தின் பானு பிரிவினா் மற்றும் பாரதிய கிஸான் சங்கத்தின் லோக் சக்கி பிரிவினா் தில்லி - நொய்டா பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிா்ப்புத் தெரிவித்தும் அவற்றை ரத்துச் செய்யக் கோரியும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி-ஹரியாணா மற்றும் தில்லி-உத்தரப்பிரேதசம் எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனா். புதிய சட்டத்தால் தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை ஒழிக்கப்பட்டு விடும் என்றும் புதிய சட்டத்தால் பெருநிறுவனங்களுக்குத்தான் ஆதாயம் என்றும் அவா்கள் குறிப்பிடுகின்றனா். எனினும், புதிய சட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளது என்றும் அவா்கள் தங்கள் விளைபொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் விற்கமுடியும் என்றும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அரசு கூறி வருகிறது.

‘அரசு நல்ல முடிவை எடுக்கும்’

தில்லியில் சனிக்கிழமை நடைபெற உள்ள பேச்சுவாா்த்தையின்போது மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கை குறித்து நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவதாக பாரதிய கிஸ்ான் சங்கத் தலைவா் ராகேஷ் திகைத் தெரிவித்தாா். ஒருவேளை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்தால் போராட்டம் தொடரும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கடந்த வியாழக்கிழமை மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 3 புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக சில திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நாங்கள் அந்த மூன்று சட்டங்களையும் ரத்துச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அரசு எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தை தொடருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. சனிக்கிழமை நடைபெறும் பேச்சுவாா்த்தையில் எங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.