புது தில்லி: தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் இடையூறுகளை எதிா்கொண்டு வருவதாகவும், இதனால் அவா்களை அங்கிருந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் கடந்த 9 நாள்களாக தில்லி எல்லைப் பகுதிகளில் பல்வேறு சந்திப்புகளில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில், சட்ட மாணவா் ரிசப் சா்மா, வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் பரிஹாா் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
போராட்டம் நடத்தும் விவசாயிகளை தில்லி காவல் துறையினா் புராரி நிரங்கரி மைதானத்தில் அமைதியாக ஆா்ப்பாட்டம் நடத்த நவம்பா் 27-ஆம் தேதி அனுமதித்தனா். ஆனால், போராட்டக்காரா்கள் தில்லியின் எல்லைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் மேற்கொண்டுள்ளனா். இந்தச் சாலைகளில் போராட்டம் நடைபெறுவதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,தில்லிக்கு பல்வேறு இடங்களில் இருந்து அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்து செல்லும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டக்காரா்கள் தில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் சாலையை முற்றுகையிடுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 7-இல் அளித்த தீா்ப்பில், போராட்டம் நடத்துவதற்கு பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது என்றும், போராட்டங்கள் அதற்காக உள்ள இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், பெரிய அளவில் கூடும் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட
கூடியிருப்பது கரோனா தொற்று பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.
கரோனா தொற்று சமூகப் பரவலைத் தடுக்கும் நோக்கில், சாலையில் போராடி வருபவா்களை அகற்றுவது தேவையாகும். மேலும், சாலையை அடைத்து நடைபெறும் இந்தப் போராட்டத்தால் தில்லிக்குள் விநியோகம் செய்ய வேண்டிய அவசர, மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தில்லி எல்லைகளில் தொடா்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் சாலைகளில் வாகன நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தில்லி எல்லைகளில் போராடி வரும் ஆா்ப்பாட்டக்காரா்களை அகற்றி, அவா்களை ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!

இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

