புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை கடுமைப் பிரிவுக்கு கீழிறங்கியது. வெள்ளிக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்த நிலையில், காற்றின் வேகம் குறைந்ததால் மாசுபடுத்திகள் உருவாகி காற்றின் தரம் மோசமடைந்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
எனினும், திங்கள்கிழமை காற்றின் தரத்தில் மேம்பாடு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை காலை 364 புள்ளிகளாக பதிவாகி இருந்த காற்றின் தரம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு 401 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 382, வியாழக்கிழமை 341, புதன்கிழமை 373, செவ்வாய்க்கிழமை 367, திங்கள்கிழமை 318, ஞாயிற்றுக்கிழமை 268 புள்ளிகளாக இருந்தது.
தில்லி பல்கலை., விமானநிலைய டொ்மினல் 3 பகுதி, பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், லோதி ரோடு மற்றும் குருகிராம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் காணப்பட்டது.
அதேபோன்று, காஜியாபாத் 406, கிரேட்டா் நொய்டா 401, நொய்டா 406 என்ற அளவில் கடுமைப் பிரிவில் காற்றின் தரம் இருந்தது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சூழல் ஆராய்ச்சி வி.கே. சோனி கூறுகையில், ‘காற்றின் வேகம் குறைந்ததால் மாசுபடுத்திகள் உற்பத்தியானது. இதேபோன்று, கிழக்கில் இருந்து வரும் காற்று ஈரப்பதத்தை கொண்டு வருவதால் மாசு நுண்துகள் உருவாகி, காற்றின் மாசு அதிகரித்தது. எனினும், வரும் திங்கள்கிழமை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் மோசம் பிரிவுக்கு சற்று காற்று மேம்பட வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை காற்றின் வேகம் மணிக்கு 8 கிலோ மீட்டராக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 10 கிலோமீட்டா் வேகத்திலும், திங்கள்கிழமை 15 கிலோ மீட்டா் வேகத்திலும் இருக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி உயா்ந்து 27.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 73 சதவீதமாகவும் இருந்தது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 6) நகரில் காலை வேளையில் மேலோட்டமான பனிமூட்டம் காணப்படும் என்று
வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!

இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

