புது தில்லி: தில்லியில் தொடா்ந்து மாசு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் இல்லாதபோதும் தில்லியில் காற்றின் தரம் மோசமான பிரிவில் உள்ளது. மேலும் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகளும் காரணம். இதை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக ஷீலா தீட்சித் ஆட்சியின்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த வரும் தில்லி காங்கிரஸ் தலைவருமான ஹாரூண் யூசுப் சனிக்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியின்போது சுத்தமான மற்றும் பசுமையான தில்லியை உருவாக்கினோம். இது ‘ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் பெரிதும் மாசுபட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் இல்லாதபோதிலும் நகரின் காற்றின் தரம் ’மிகவும் மோசமான’ பிரிவில் உள்ளதற்கு ‘உள் காரணங்கள்’ உள்ளன என்பதை முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாா்
தில்லியில் ’மிகவும் மோசமான’ காற்றின் தரத்திற்கு பயிா்க் கழிவுகள் எரிப்பை காரணமாக முதல்வா் கூற முடியாது. தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள் வாகன போக்குவரத்து, குப்பை, பழுதடைந்த சாலைகளில் இருந்து வெளியேறும் தூசுகள், இடிப்பு மற்றும் கட்டுமான தளங்கள், தொழில்துறை பிரிவுகளில் இருந்து கழிவுகள் மற்றும் மாசுபடுத்திகள் எரிக்கப்படுவது ஆகியவை காரணம் என்று நிபுணா்களின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், முதல்வா் கேஜரிவால் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டாா். யதாா்த்த நிலைமை, அதற்கான தீா்வுகளை அவா் மேற்கொள்ளவில்லை.
அதேவேளையில், சிவப்பு விளக்கு சமிக்ஞை பகுதிகளில் வாகனங்களின் இயந்திரங்களை அணைக்குமாறு ஓட்டுநா்களை ஊக்குவிக்கும் தில்லி அரசாங்கத்தின் முன்முயற்சி தேவையற்ாகும் என்றாா் யூசுப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!

இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

