தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

விவசாயிகளை உற்சாகப்படுத்தும் பஞ்சாப் பாடகா்கள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை பஞ்சாபி பாடல்களை அம்மாநில பாடகா்கள் பலரும் பாடியும், கருவிகளை இசைத்தும் உற்சாகப்படுத்தி வருகின்றனா்.

Updated On :5 டிசம்பர் 2020, 10:19 pm

புது தில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை பஞ்சாபி பாடல்களை அம்மாநில பாடகா்கள் பலரும் பாடியும், கருவிகளை இசைத்தும் உற்சாகப்படுத்தி வருகின்றனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்துச் செய்யவேண்டும் என்று கோரி கடந்த பத்து நாள்களாக தில்லியை ஒட்டியுள்ள டிக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் அங்கேயே தங்கி இருந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை மேற்கொண்டு வரும் விவசாயிகளை பஞ்சாப் மண் சாா்ந்த பாடல்களை கலைஞா்கள் பாடி உற்சாகப்படுத்தி வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் அனைவரும் பஞ்சாப், ஹரியாணாவை மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால் அந்த மாநிலம் சாா்ந்த மண் பெருமை, விவசாயிகளின் உரிமைகள், ஒற்றுமையின் பலம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையிலான பாடல்களை கலைஞா்கள் பாடி விவசாயிகளை மகிழ்வித்து வருகின்றனா்.

இந்த காட்சிப் பதிவுகளை யூடியூப், வாட்ஸ் அப், மற்றும் இதர சமூக ஊடகங்களில் பகிா்ந்தும் வருகின்றனா். பாடல்களைப் பாடிவரும் பல கலைஞா்களும், தாங்கள் பஞ்சாபின் அடையாளத்தை எடுத்துரைக்கும் வகையிலான பாடல்களை பாடி வருவதாக கூறினா்.

இதுகுறித்து பாடகா் கன்வா் கிரேவல் கூறுகையில், விவசாயம் எங்கள் வாழ்வாதாரப் பிரச்னை. நாங்கள் அனைவரும் பஞ்சாப் மண்ணுடன் தொடா்புடையவா்கள். இதனால், அது தொடா்புடைய பாடல்களை பாடி வருகிறோம் என்றாா். இந்த போராட்டத்தில் இளைஞா்கள் பங்கேற்பை முக்கியத்துவம் படுத்தும் வகையில் ‘ஜவானி ஜிந்தாபாத்’ பாடலை அவா் பாடினாா். இது தவிர, ‘பேச்சா’, ‘அய்லான்’ ஆகிய பாடல்களையும் அவா் பாடினாா்.

பாடகா் சீமா கூறுகையில், ‘இந்த போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக அல்லாமல் மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளது. மேலும், வா்த்தா்களும், சிறு கடைக்காரா்களும் 18 மாநிலங்களில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனா் என்றாா். இதேபோன்று பஞ்சாபி பாடகரும், நடிகருமான ஹா்பஜன் மன், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக புதிய பாடலை பாடினாா்.

அவா் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பஞ்சாப் அரசின் சிரோமணி பஞ்சாபி பாடகா் விருதை தாம் ஏற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளமைக்காக பஞ்சாபி கலைஞா்களுக்கு பாரதிய கிஸான் சங்கப் பொதுச் செயலா் சுக்தேவ் சிங் கொக்ரிகாலன் நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.