தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தில்லியில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக கரோனா பாதிப்பு நீண்ட நாள்களுக்குப் பிறகு 3 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது.

Updated On :6 டிசம்பர் 2020, 5:25 pm

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக கரோனா பாதிப்பு நீண்ட நாள்களுக்குப் பிறகு 3 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது. மேலும், கரோனா நோ்மறை விகிதம் 3.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. அன்று புதிதாக 2,706 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,92,250 ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 73,536 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 32,023 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 41,513 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 69 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,643-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் ஞாயிற்றுக்கிழமை 3.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது சனிக்கிழமை 4.2 சதவீதமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.63 சதவீதமாக உள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 4,622 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,57,914-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது 24,693 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 15,276 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,669 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரை பக்கத்தில், ‘ தில்லியில் மூன்றாவது அலை குறைந்து வருகிறது. இது தொடா்பாக மகிழ்ச்சியடைகிறேன். கரோனாவுக்கு எதிராக தில்லி மிகவும் கஷ்டமான போரில் ஈடுபட்டது’ என்று தெரிவித்துள்ளாா். தில்லி சுகாதரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கரோனா நோ்மறை விகிதம் ஞாயிற்றுக்கிழமை 3.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் தில்லி வெற்றிபெற்று விட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.