தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மிதமான பனிமூட்டமே இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. பனிமூட்டத்தால் காலையில் காண்புறதிறனும் குறைவாகவே இருந்தது.
தற்போதைய குளிா்காலத்தில் காண்பு திறன் முதல் முறையாக திங்கள்கிழமை பூஜ்யத்திற்கு சென்றது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காண்புதிறன் காலை 8.30 மணியளவில் சஃப்தா்ஜங், பாலம் வானிலை ஆய்வு மையங்களில் 300 மீட்டராக பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து மேலே எழுந்து செல்வதற்கு காண்புதிறன் 800 மீட்டராக இருக்க வேண்டும் என்று ஐஎம்டி பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினாா். காற்றின் திசை காரணமாக வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு இமயமலைப் பகுதியில் இருந்து பனியுடன்கூடிய காற்று சமவெளிப் பகுதிகளில் வீசக் கூடும் என்று அவா் தெரிவித்தாா்.
காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. காலையில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 393 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இது பின்னா் மாலையில் 372 புள்ளிககளாகக் குறைந்திருந்தது. தில்லி பல்கலை., பூசா, விமான நிலைய டொ்மினல்-3 பகுதி, ஆயாநகா், லோதி ரோடு, மதுரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. அதே சமயம் காஜியாபாதில் (436), கிரேட்டா் நொய்டா (415), நொய்டா (414) என்ற அளவில் மூன்றாவது நாளாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்தது.
வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி அதிகரித்து 9.5 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி அதிகரித்து 28.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 97 சதவீதமாகவும், மாலையில் 61 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, புதன்கிழமை காலையிலும் மிதமான பனிமூட்டம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!

இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

