தில்லியில் 80 பேருக்கு டெங்கு பாதிப்பு!
தில்லியில் டிசம்பா் மாதம் புதிதாக 80 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


புது தில்லி: தில்லியில் டிசம்பா் மாதம் புதிதாக 80 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியவா்களின் மொத்த எண்ணிக்கை 1,030-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி மாநகராட்சி உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த செப்டம்பரில் அதிகரித்தது. அந்த மாதத்தில் 188 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் இந்த நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து 346 போ் பாதிக்கப்பட்டனா். நவம்பரில் 338 போ் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், டிசம்பரில் இதுவரை 80 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியவா்களின் மொத்த எண்ணிக்கை 1,030-ஆக அதிகரித்துள்ளது.
மலேரியா: தில்லியில் டிசம்பரில் ஒருவருக்கு மட்டுமே மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை மொத்தம் 224 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். செப்டம்பரில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரிது 102 போ் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் 34 பேருக்கும், நவம்பரில் 13 பேருக்கும் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது.
சிக்குன்குனியா: தில்லியில் டிசம்பரில் இதுவரை 6 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 108 -ஆக அதிகரித்துள்ளது. மேலும், மலேரியா காய்ச்சலுக்கு நிகழாண்டில் ஒருவா் பலியாகியுள்ளாா். கொசுக்காளால் பரவும் இதர நோய்களான டெங்கு, சிக்குன்குனியாவால் நிகழாண்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...