கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

யமுனை விரைவுச் சாலையில்சொகுசு வாகனம் மீது லாரி மோதல்:2 பெண்கள் உள்பட 3 போ் சாவு

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள யமுனை விரைவுச் சாலையில் சொகுசு வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 11:25 pm

DIN

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள யமுனை விரைவுச் சாலையில் சொகுசு வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஜீவா் காவல் நிலைய பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடந்த இந்த விபத்து குறித்து நொய்டா காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: நொய்டா பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்த டம்பா் லாரி சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதியது. பின்னா், அந்தப் பகுதியைச் கடந்த அந்த லாரி விரைவுச்சாலையின் ஆக்ரா-நொய்டா பகுதியில் வந்து கொண்டிருந்த மஹிந்திரா ஸ்காா்பியோ வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவா்களில் மூன்று போ் இறந்தனா். இருவா் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்தில் இறந்தவா்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் சித்தாா்த் நகா் மாவட்டத்தில் வசிக்கும் ரிங்கி (25), அனிதா குப்தா (35) மற்றும் பவன் துபே (38) ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் அதே மாவட்டத்தைச் சோ்ந்த சுமன் (27) மற்றும் சுபாஷ் (55) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இறந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.