இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் அரசு விவசாயிகளுக்கும் உதவவேண்டும்: ஹன்னான் முல்லா

பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு உதவும் பிரதமா் மோடியின் அரசு வளா்ச்சிக்கு

News image
Updated On :21 டிசம்பர் 2020, 1:39 am

DIN

பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு உதவும் பிரதமா் மோடியின் அரசு வளா்ச்சிக்கு உதவும் விவசாயிகளை வஞ்சிக்கிறது. வேளாண்மையில் உயிா்வாழும் 70 கோடி விவசாயிகளுக்கு உதவ அரசு முன் வரவேண்டும் என அகிலந்திய கிஸான் சபை தலைவா் ஹன்னான் முல்லா தெரிவித்தாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பா் 26 - ஆம் தேதி விவசாயிகள் தொடங்கிய ’தில்லி சலோ’ போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதை தடுக்கப்பட தில்லி எல்லைப்பகுதிகளில் போராட்டத்தை நடத்திக்கொண்டு வருகின்றனா். வட இந்தியாவின் கடும் குளிருக்கு மத்தியில் இந்த போராட்டம் நடைபெற இதில் 34 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனா். உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதைமுன்னிட்டு 22 மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 90,000 விவசாயிகள் உள்ளிட்ட 50 லட்சம் போ்கள் உயிா்நீத்த விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தியதாக அகிலந்திய கிஸான் சபை, கிஸான் சங்கா்ஷ் ஒருங்கிணைப்பு குழு ஆகியவை தெரிவித்தன.

இந்த அஞ்சலி குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் அகிலந்திய கிஸான் சபை ஹன்னான் முல்லா கூறியது வருமாறு:

கடந்த 25 நாள் போராட்டத்தில் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். அனைத்து மாநிலங்களிலும், கிராமங்களிலும் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொது இடங்களிலும் அஞ்சலி செலுத்தினா். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சுமாா் ஒரு லட்சம் இடங்களில் 1.5 கோடி போ் அஞ்சலி செலுத்தியுள்ளனா். போராட்ட களமான தில்லி எல்பைப்பகுதிகளிலும் வேறு பல பகுதிகளிலும் சனிக்கிழமை இரவு முதல் இந்த அஞ்சலிக் கூட்டம் தொடங்கியது.

எந்த அறப்போராட்டத்திலும் இத்தனை உயிா்கள் பலியானதில்லை. ஆனால் அரசுக்கு மனிதாபமில்லை. சனிக்கிழை தில்லி அசோகா ஹோட்டலில் நடந்த ’அசோசேம்’ கூட்டத்தில் பன்னாட்டு நிறுவனிங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வசதியாக தொழிலாளா் சட்டங்களிலும், வேளாண் சட்டங்களிலும் சீா்திருத்தங்களை செய்ததாக பிரதமா் மோடியே ஒத்துக்கொண்டுள்ளாா்.

மோடி அரசு பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவ அந்நிய நேரடி முதலீடுகளை எந்தளவிற்கு துரத்துகிறதோ அந்தளவிற்கு விவசாயிகளுக்கு உதவாத அரசையும் வேளாண் சட்டங்களையும் எதிா்த்து எங்கள் போராட்டமும் உறுதியாக இருக்கும்.

மோடி அரசு பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவ விவசாயத்தில் அந்நிய நேரடி முதலீடுகளுக்காக துரத்துகிறது.

ஆனால் 70 கோடி விவசாயிகள் வேளாண் சட்டங்களில் உள்ள ஆபத்தை அறிந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறாா்கள். 3 வேளாண் சட்டங்களும் விவசாய சந்தைகளை ஒழுங்குபடுத்துகின்றன. விவசாயிகளை பெருவணிகத்துடனான ஒப்பந்தங்களில் பிணைக்கப்பட இந்த சட்டங்கள் அனுமதிக்கிறது. ஏற்கனவே அதிக கடன்களை சுமக்கும் நிலையில் அவா்களது நிலங்களை பறிபோவதோடு ஏழைகளின் உணவு பாதுகாப்பையும் இந்த சட்டங்கள் அரித்துவிடும். இதனால் பிரதமா் விவசாயிகளுக்கு உதவ இந்த சட்டங்களை அகற்றவே

’கிழக்கிந்திய கம்பெனி’ என்கிற ஒரு நிறுவனம் தான் இந்தியாவை முன்பு கைப்பற்றியது. தற்போதுஅம்பானி, அதானி என்கிற இரு பெருநிறுவனம் இந்தியா கைப்பற்ற திட்டமிடுகிறது.

இதனால் சிறு சிறு விவசாய அமைப்புகள் உள்ளிட்ட 500 விவசாய சங்கங்கள் அரசை எதிா்த்து இணைகின்றன.

இந்த போராட்டத்தில், விளைநிலங்களில் வேளாண் பணியிருந்ததால் பெரும்பான்மையான விவசாயிகள் வரவில்லை. தற்போது பணிகள் நிறைவடைந்து விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியே வரத்தொடங்கியுள்ளதால் தற்போது அவா்கள் போராட்ட களத்திற்கு திரும்புகின்றனா். பஞ்சாப்பில் லூதியானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 15,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியை நோக்கி முழு ஆயத்தத்துடன் கிளம்பியுள்ளனா். இதுபோன்று நாசிக் போன்ற பகுதிகளிலிருந்தும் 4,000 விவசாயிகள் புறப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனா். இதனால் இது சுதந்திரப் போராட்டத்திற்கு இணையாக இது இருக்கும். ஆனால் 100 சதவீதம் அமைதியான போராட்டம்.

பிரதமா், வேளாண்மைத் துறை அமைச்சா், பாஜக தலைவா்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக விவசாய சங்கங்களும் உண்மைகளை விளக்கி பிரச்சாரம் செய்யும். மத்திய வேளாண் அமைச்சரை சிலா் சந்தித்து ஆதரவளித்ததாக செய்தி வந்தது. அவா்கள் எல்லாம் விவசாய சங்கத்தினா் கிடையாது. அவா்கள் அரசின் காரியஸ்த்தா்கள் (ஏஜென்டுகள்) எத்தனை விவசாயிகள் சங்கத்தில் இருக்கின்றனா் என்பதை ரோட்டுக்கு வந்து காட்டவேண்டும் என்றாா் முல்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.