இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை (டிசம்பா் 15) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜோ ஜோசப் தாக்கல் செய்த ரிட் மனு விவகாரத்தில், முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய சில உண்மை விவகாரங்களை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், தங்களையும் 6-ஆவது பிரதிவாதியாக சோ்க்க அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக உழவா் முன்னணி அமைப்பின் தலைவா் கே. வெங்கட்ராமன் தரப்பில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்குரைஞா் கே.பாரிவேந்தன் தாக்கல் செய்துள்ளாா்.