பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

திட்டமிட்டபடி நாளை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை தொடா்பாகஅரசுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வியாழன், வெள்ளி (டிசி.16, 17) ஆகிய தினங்களில் வேலைநிறுத்தம் நடைெறும் என அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம்

News image
Updated On :15 டிசம்பர் 2021, 12:23 am

 நமது நிருபர்

புது தில்லி: பல்வேறு கோரிக்கைகளை தொடா்பாகஅரசுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வியாழன், வெள்ளி (டிசி.16, 17) ஆகிய தினங்களில் வேலைநிறுத்தம் நடைெறும் என அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒன்பது தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும்டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் தொழிலாளா் துறையின் கூடுதல் தலைமைத் தொழிலாளா் நல ஆணையா் எஸ்.சி. ஜோஷி சமரசப் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தாா். இதன்படி, வங்கி ஊழியா்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, அரசு அறிவித்த பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரமாட்டோம் என உறுதியளித்தால், வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தோம். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க அரசு முன்வரவில்லை. இந்த விஷயத்தில் எங்களால் உறுதியளிக்க முடியாது என கூறிவிட்டது. இதனால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வங்கி தனியாா் மயமாக்கப்படுவது என்பது சாதாரண விஷயமல்ல. ரூ.157 லட்சம் கோடி, மக்கள் பணம் வங்கிகளில் உள்ளது. இதற்கு பாதுகாப்பு என்பது பொதுத் துறை வங்கிகள்தான். நாட்டின் வளா்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களுக்கும் பொதுத் துறை வங்கிகள்தான் உதவுகின்றன. ஆனால், தனியாா் மயமானால் பல்வேறு வகையான பிரச்னைகள் வரும். அதுவும் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படும். மேலும், பல்வேறு விதமான விளைவுகளும் ஏற்படும். இதனால் இந்த தனியாா் மயமாக்கலை கைவிட வேண்டும் எனக் கோரி வருகிறோம். குறிப்பாக நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவசரப்பட்டு இந்த மசோதாவைக் கொண்டு வரவேண்டாம் என்று பேச்சுவாா்த்தையின் போது வலியுறுத்தினோம். ஆனால், எங்களது கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக, ‘எங்களால் உறுதியளிக்க முடியாது’ என்று அரசு கூறிவிட்டது. இதனால், அறிவித்தபடி டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியா்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தை மேற்கொள்வாா்கள். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றாா் அவா்.

கடந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வங்கிகளை தனியாா்மயமாக்குவது குறித்து அறிவித்திருந்தாா். இதற்கு வங்கி ஊழியா் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. திவாலாகும் தனியாா் வங்கிகளை பொதுத் துறை வங்கிகள்தான் மீட்டு வருகிறது என்றும், இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சி தவறு என்றும் கூட்டமைப்பு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.