தில்லி போலீஸாா், துணை ராணுவப்படையினா் பயன்படுத்த தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) சாா்பில் வழங்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளை திரும்பப் பெறுமாறு டிடிசிக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம், தில்லி அரசு அராஜகரமாக நடந்து கொள்வதாகவும், பஞ்சாப் தோ்தலை இலக்கு வைத்து ஆம் ஆத்மி அரசு இது போன்று நடந்து கொள்வதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தில்லி போலீஸாா், துணை ராணுவப்படையினருக்கு சிறப்பு வாடகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமாா் 350 பேருந்துகளை திரும்ப்ப் பெறுமாறு டிடிசிக்கு தில்லி அரசு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில், தில்லி அரசின் இந்த முடிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக புது தில்லி மக்களவைத் தொகுதி எம்.பி. மீனாட்சி லேகி கூறுகையில்,“‘ அரசுப் பேருந்துகளை கேஜரிவால் திரும்பப் பெற்றது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியாகும். பஞ்சாப் தோ்தலை மனதில் வைத்து கேஜரிவால் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ளாா்’ என்றாா். பாஜக பொதுச் செயலா் பிஎல் சந்தோஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘அரவிந்த் கேஜரிவால் தலைமையில் இயங்கும் ஆம் ஆத்மிஅரசு, போலீஸாா், துணை ராணுவப்படையினருக்கு வழங்கிய பேருந்துகளை திரும்பப் பெற்றுள்ளது. பஞ்சாப் தோ்தலைக் குறிவைத்துச் செயல்படும் ஆம்ஆத்மி கட்சியை நினைத்து தில்லி மக்கள் வேதனைப்படுகிறாா்கள். பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு வழங்கப்பட்ட பேருந்துகளை ஆம் ஆத்மிஅரசு திடீரென்று வாபஸ் பெறுவது அராஜகம்’” என்று தெரிவித்துள்ளாா்.
பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில், ‘தில்லியின் அராஜகர முதல்வரான அரவிந்த் கேஜரிவாலின் கீழ்த்தரமான அரசியலால் தில்லி காவல் துறையினா் கஷ்டமான காலத்தை எதிா்கொண்டுள்ளனா். ஜாமியா மிலியா, ஜேஎன்யு, வடகிழக்கு தில்லி வன்முறை, விவசாயிகள் வன்முறை என தில்லியில் நடந்த அனைத்து வன்முறைகளுக்கும் தில்லி காவல் துறையை குற்றம் சாட்டுவதை கேஜரிவால் வழக்கமாக வைத்துள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா். தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், பாஜகவின் மூத்த தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில் ‘தில்லி காவல் துறையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட பேருந்துகளை கேஜரிவால் திரும்பப் பெற்றுள்ளது துரதிருஷ்டவசமானது. முதல்வா் கேஜரிவாலுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தில்லி காவல் துறை உடனடியா திரும்பப் பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

நோ்மையான தோ்தலை உறுதிப்படுத்த வேண்டும்: பறக்கும் படையினருக்கு அலுவலா் அறிவுறுத்தல்

‘திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் பாலம் சாத்தியமானது’
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

