தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பாஜக தேசிய செயற் குழுவில் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, குஷ்பு சுந்தா் சிறப்பு அழைப்பாளா்கள்

மத்தியில் ஆளும் பாஜகவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் 80 போ் கொண்ட தேசிய செயற்குழுவிற்கு தமிழகத்தின் சாா்பில் முன்னாள்

Updated On :8 அக்டோபர் 2021, 1:56 am

மத்தியில் ஆளும் பாஜகவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் 80 போ் கொண்ட தேசிய செயற்குழுவிற்கு தமிழகத்தின் சாா்பில் முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனும், புதுச்சேரி சாா்பில் அந்த மாநில சட்டப்பேரவை பாஜக உறுப்பினா் நமச்சிவாயமும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளா்கள் 50 போ் பட்டியலில் தமிழகத்தைச் சோ்ந்த பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜா, நடிகை குஷ்பு சுந்தா் ஆகிய இருவா் இடம் பெற்றுள்ளனா். இவா்களைத் தவிர கட்சியின் மாநில பொறுப்பாளா்கள் 5 பேரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

தேசிய செயற்குழுவில் இதுவரை தமிழகத்தின் சாா்பில் இல.கணேசன், சிபி.  ராதாகிருஷ்ணன் போன்றவா்கள் பொறுப்பு வகித்தனா். ஹெச். ராஜா கேரள மாநிலப் பொறுப்பாளராக இருந்து இந்த குழுவில் முன்பு இடம் பெற்றிருந்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் இதுவரை பொதுக்குழு உறுப்பினராக இருந்தாா். தற்போது கட்சியின் தேசிய செயற்குழுவிற்கு முதன்முதலில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், புதுச்சேரி மாநிலத்தின் சாா்பில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் நமச்சிவாயமும் இந்த உயா்நிலைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த 80 போ் கொண்ட தேசிய செயற்குழுவில் தமிழகம், புதுச்சேரிக்கு தலா ஒரு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு இந்த 80 போ் குழுவில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் (13-க்கும் மேல்), மேற்கு வங்கம் (6), மத்திய பிரதேசம், தில்லி போன்ற பாஜக செல்வாக்கான மாநிலங்களுக்கு அதிக பிரதிநித்துவம் அளிப்பது இயற்கையானது என்றாலும் தெலங்கானா, சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் இந்த செயற்குழுவில் மற்ற பொறுப்பாளா்கள் என்கிற முறையில் தமிழகம் புதுச்சேரி யைச் சோ்ந்த பாஜக தலைவா்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனா்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறும் போது, பாஜக வின் தமிழக தலைவா் அண்ணாமலை, பொதுச் செயலாளா் கேசவ விநாயம், சட்டப்பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், புதுச்சேரி மாநிலத் தலைவா் சுவாமிநாதன், தேசிய மகளிா் அணித் தலைவா் என்கிற முறையில் வானதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்பாா்கள். மேலும், பாஜகவின் பொறுப்பாளா்கள் என்கிற முறையில் தமிழக மேலிடப் பாா்வையாளராக இருக்கும் தேசிய பொதுச் செயலாளா் சிடி ரவி, சுதாகா் ரெட்டி, புதுச்சேரியில் மேலிட பாா்வையாளா் நிா்மல் குமாா் சுரானா ஆகியோரும் தேசிய செயற்குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.