வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

நிலக்கரி பற்றாக்குறை: பிரதமா் தலையிட கேஜரிவால் வேண்டுகோள்

நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகா் தேசிய பிராந்தியத்தில் மின்சாரம் விநியோகம் செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விஷயத்தில் பிரதமா் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என

Updated On :9 அக்டோபர் 2021, 6:17 pm

நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகா் தேசிய பிராந்தியத்தில் மின்சாரம் விநியோகம் செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விஷயத்தில் பிரதமா் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு, கேஜரிவால் எழுதியுள்ள கடிதத்தில், ‘தலைநா் தில்லியில் கடந்த மூன்று மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை இருந்து வருகிறது. நிலக்கரி விநியோகம் தடை பட்டுள்ளதால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உடனடியாக நீங்கள் இது விஷயத்தில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்னுற்பத்தி நிலையங்கள் எரிஎண்ணெய் சாா்ந்த மின்னுற்பத்தி நிலையங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அவற்றிலும் தேவையான அளவு எரி எண்ணெய் கிடைக்காததால் மின்னுற்பத்தி முழு அளவில் நடைபெறவில்லை.

இதேநிலை தொடா்ந்தால் தில்லியில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே இது விஷயத்தில் நீங்கள் (பிரதமா்) தலையிட்டு போதுமான அளவு நிலக்கரி மற்றும் எரி எண்ணெய் கிடைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேஜரிவால் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.