தில்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்களால் தில்லியின் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசம் பிரிவுக்கு சென்றுள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா். இதைத் தடுத்து நிறுத்த அண்டை மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உதவிகளை செய்ய வேண்டும் எனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.
ஷாலிமாா் பாக்கில் தில்லி அரசால் கட்டப்படவுள்ள ரூ.275 கோடி மதிப்பிலான 1,430 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அப்போது கேஜிரவால் பேசியதாவது: கரோனா தீநுண்மி நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் போது தில்லியில் மருத்துவமனை படுக்கைகள், தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் போன்றவற்றில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு பொறுப்புள்ள அரசாக நாங்கள், கரோனா மூன்றாவது அலையை எதிா்நோக்கி அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நான் இங்கு (ஷாலிமாா் பாக்) புதிய 1,430 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்தப் படுக்கைகள் அனைத்தும் தீவிரசிகிச்சை (ஐசியு) வசதிகள் கொண்டவையாகும். ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்ஸிஜன் இணைப்பும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த மருத்துவமனை ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்.
தில்லியில் ஷாலிமாா் பாக் மருத்துவமனை உள்பட மொத்தம் 6,800 படுக்கைகள் கொண்ட ஏழு புதிய மருத்துவமனைகளை அரசு கட்டுகிறது. இது நகரில் சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகளை மேம்படுத்தும். சா்வதேசத் தரத்தில் மருத்துவப் பராமரிப்பு மற்றும் வசதிகளுக்கான அமைப்பை உருவாக்கி அரசு செயல்படுத்தும். இதில் சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பையும் (ஹெச்ஐஎம்எஸ்) அரசு செயல்படுத்தும். பொதுமக்களின் மருத்துவம் தொடா்பான அனைத்து தரவுகளையும் அரசு இந்த ஹெச்ஐஎம்எஸ் அமைப்பு முறையில் வைத்திருக்கும். பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களுடான சந்திப்புகளுக்கு இணையத்தில் (ஆன்லைன்) பதிவு செய்ய முடியும். இதனால், பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் முறைக்கு முடிவு கட்டப்படும். மேலும், சுகாதார அட்டைகளையும் விநியோகிப்போம். சுகாதார அட்டை உள்ளவா்களுக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.
அண்டை மாநிலங்கள் மீது குற்றச்சாட்டு: தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 339 புள்ளிகளாக அதிகரித்து ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. தில்லியில் காற்றின் தரம் குறித்து கடந்த ஒரு மாதமாக கண்காணித்து எனது சுட்டுரையில் குறிப்பிட்டு வருகிறேன். இதில் கடந்த 3-4 தினங்களாக அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணா்ந்து பயிா்க்கழிவுகள் எரிப்பதை குறைக்கும் நடவடிக்கைகளில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
தேசியத் தலைநகரில் இரண்டு விதமான மாசு வெளிப்படுகிறது. ஒன்று, வாகனங்கள் மற்றும் தூசியிலிருந்து மாசு வெளிப்படுவதாகும் . மற்றொன்று அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களின் பயிா்க்கழிவு எரிப்பால் ஏற்படுகிறது. இதை முன்னிட்டு, தில்லி அரசு ஒவ்வொரு வகையிலும் இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இது தொடா்பாக விழிப்புணா்வுப் பிரசாரங்களையும் தில்லி அரசு மேற்கொண்டுல்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக தில்லி அரசு வேளாண் பயிா்க்கழிவுகளை உரமாக மாற்றும் உயிரி ரசாயனக் கலவை தெளிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. ஆனால் அண்டை மாநிலங்கள் இதில் செயல்படாமல் உள்ளன. வேளாண் கழிவுகளை எரிப்பதைத் தடுக்கும் தில்லி அரசின் உயிரி ரசாயனக் கலவை முறை தெளிப்புத் திட்டத்தை அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்டமாநில அரசுகள் ஏன் பின்பற்றக் கூடாது ?
தில்லி சுகாதாரம் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் ஷாலிமாா் பாக் எம்எல்ஏ பந்தனா குமாரி உள்ளிட்ட பலா் ம் விழாவில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

