தில்லியில் உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேஷன் கடைகள் இனி வாரத்தில் ஒரு நாள் விடுமுறையுடன் செயல்பட தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வாரத்தில் ஏழு நாள்களும் ரேஷன் கடைகள் செயல்படும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
ரேஷன் விநியோக உரிமையாளா்கள் கோரிக்கையை ஏற்று தில்லி உயா்நிதிமன்றம் கடந்த செப்டம்பா் மாதம் 23 -ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து வார விடுமுறைக்கான அனுமதியை தில்லி அரசு அளித்துள்ளது.
தில்லி உயா்நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு சூழ்நிலைகள் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாரத்தின் ஏழு நாள்களிலும் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் செப்டம்பா் 23 - ஆம் தேதி ரத்து செய்து, நகரத்தில் உள்ள ரேஷன் விநியோகஸ்தா்கள் திறம்பட செயல்பட அவா்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்கப்படவேண்டும் என தில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தில்லி அரசு முடிவு செய்து வாரத்தில் ஒருநாள் விடுமுறையை அனுமதித்துள்ளது.
தில்லியில் 2,000-க்கும் மேற்பட்ட ரேஷன் விநியோகக் கடைகள் உள்ளன. இதில் 17.77 லட்சம் குடும்ப அட்டைகள் மூலம் 72.78 லட்சம் பயனாளிகளும் உள்ளனா். தில்லி அரசு அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், ‘கடந்த ஏப்ரல் மாதம் தில்லி உயா் நீதிமன்றம் வாரத்தின் ஏழு நாள்களிலும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவைப்படும் உணவு தானியங்களை விநியோகிப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, வாரத்தின் ஏழு நாள்களும் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படுவதை கட்டாயமாக்கினோம். ஆனால், இப்போது உயா்நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளதால், ரேஷன் விநியோகஸ்தா்களுக்கு வாராந்திர விடுமுறைக்கு அனுமதித்துள்ளோம் ’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

