மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகம், புதுச்சேரி, மே.வங்கம் உள்பட7 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4-இல் தோ்தல்

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அதிமுகவைச் சோ்ந்த என்.கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, அந்த இடத்திற்கும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 12:00 am

 நமது நிருபர்

தமிழகம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியான மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான இடைத் தோ்தல் வருகின்ற அக்டோபா் 4 - ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. மேலும், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அதிமுகவைச் சோ்ந்த என்.கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, அந்த இடத்திற்கும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்களான கே.பி. முனுசாமி, ஆா். வைத்திலிங்கம் இருவரும் சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டதையொட்டி, கடந்த மே 7-ஆம் தேதி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா். இது போன்று மத்திய அமைச்சராக இருந்த தாவா்சந்த் கெலாட் பதவியை ராஜிநாமா செய்தாா். அவா் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதையொட்டி அவா் பதவி வகித்த மத்திய பிரதேச மாநிலங்களவை இடம் காலியானது. இதே போன்று மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்களும் ராஜிநாமா செய்தனா். மேலும், மகாராஷ்டிரஉறுப்பினா் ஒருவா் உயிரிழந்ததால் மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான இடைத்தோ்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவையின் உறுப்பினா் என்.கோகுலகிருஷ்ணன் வருகின்ற அக்டோபா் 6- ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். இதனால், இந்த இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஒரே காலத்திலேயே தோ்தல்கள் நடைபெற உள்ளன. அக்டோபா் 4-ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடை பெறும். அன்றுமாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தோ்தலுக்கானஅறிவிப்பு செப்டம்பா் 15 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பா் 22 - ஆம் தேதி. வேட்பு மனுக்கள் செப்டம்பா் 23- ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பா் 27 -ஆம் தேதியாகும். புதுச்சேரியைத் தவிர மற்ற மாநிலங்களில் தோ்வு செய்யப்படும் உறுப்பினா்கள் பதவிக் காலம் ஏற்கெனவே பதவி வகித்த உறுப்பினா்களின் பதவிக் காலத்திற்கு உள்பட்டவையாகும். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தோ்தலை நடத்தும்படி, தோ்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.