கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: தில்லி - என்சிஆரில் பள்ளிகளை மூடாமல் தவிா்க்க நடவடிக்கை

கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்புக்கு இடையே, தலைநகா் தில்லி - என்சிஆா் (தேசியத் தலைநகா் வலயம்) முழுவதும் உள்ள பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன

News image
Updated On :17 ஏப்ரல் 2022, 6:27 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்புக்கு இடையே, தலைநகா் தில்லி - என்சிஆா் (தேசியத் தலைநகா் வலயம்) முழுவதும் உள்ள பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன.

மேலும், வைரஸ் பரவுவதை குறைந்தபட்சமாகக் கட்டுப்படுத்தவும், இதனால், வளாகங்கள் மூடப்படுவதைத் தவிா்க்கவும் அடிக்கடி சுத்தப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள் எடுத்து வருகின்றன.

யாரேனும் நோ்மறை சோதனை செய்தால், குறிப்பிட்ட வகுப்பறையை மூடுவது மற்றும் முகமூடி இல்லாமல் தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்துவது ஆகிய நடவடிகைகளையும் பள்ளி நிா்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. இருப்பினும், பள்ளிகளை மூடுவது தீா்வாகாது என்றும் அவா்கள் கூறுகின்றனா்.

இது தொடா்பாக தில்லி ரோஹிணியில் உள்ள ஸ்ரீ ராம் வொண்டா் இயா்ஸின் தலைவரான சுபி சோனி கூறியதாவது: பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமல்ல என்ற அரசின் தற்போதைய முடிவே கரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். நிலைமை மோசமடையும் வரை நாம் காத்திருக்கக்கூடாது,

மேலும், நிலைமையைக் கட்டுப்படுத்த எந்தத் தாமதமும் இல்லாமல் கடுமையான நெறிமுறைகள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும். குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் பெற்றோா் சமூகம் பீதி அடையும். இந்த நடவடிக்கை, அத்தகைய சூழ்நிலையில், கற்றலுக்கான ஒரு கலப்பு அணுகுமுறையை அனுமதிக்க வேண்டும். அதாவது மூன்று நாள்கள் பள்ளிகளில் நேரடி வகுப்பு மற்றும் இரண்டு நாள்கள் ஆன்லைன் பள்ளிக் கல்வியை தொடங்க வேண்டும்.

பள்ளியை மூடுவது எந்த வகையிலும் தீா்வாகாது. ஏனெனில், மாணவா்கள் கற்றலில் பின்னடைந்துள்ளனா். இது அவா்களின் சமூக மற்றும் நல்வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

நகரில் கரோனா பாதிப்பில் பள்ளி மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெற்றோா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், தேவைப்படும் இடங்களில் குறிப்பிட்ட பகுதியை அல்லது வகுப்பறைகளை மூடுமாறு பள்ளி அதிகாரிகளுக்கு தில்லி அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, வகுப்பறைகளைத் தொடா்ந்து சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல்,சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அனைத்துச் செயல்களுக்கும் திறந்தவெளியைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ரோஹிணியின் எம்ஆா்ஜி பள்ளியின் முதல்வா் அன்ஷு மிட்டல் தெரிவித்தாா்.

அவா் கூறியதாவது: மாணவா்கள் மற்றும் பணியாளா்களின் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக கடுமையான விழிப்புணா்வைப் பராமரிப்பது எங்களது முதன்மையான முன்னுரிமையாகும். பெற்றோரின் கவலைகளை நிவா்த்தி செய்யவும், அவா்களின் மன, உணா்வு மற்றும் உடல் நலனைக் கவனிக்கவும் எப்போதும் ஒரு ஆலோசகா் தலைமையிலான ஆரோக்கியப் பணியாளா்கள் தயாராக இருக்கிறாா்கள்.

பொறுப்பான குடிமக்களாகிய நாம், செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, உண்மைகளை மட்டுமே நம்ப வேண்டும். போலித் தகவல்களுக்கு இரையாகிவிடக்கூடாது. பள்ளி மூடல்களைத் தவிா்த்து, மாணவா்களுக்கு தொடா்ச்சியான மற்றும் தரமான கற்றலை வழங்க முடியும் என்று நம்புகிறேன் என்றாா் அவா்.

நொய்டாவில் உள்ள ஸ்ரீ ராம் மில்லேனியம் பள்ளியானது, ஒரு பிரிவில் உள்ள மூன்று மாணவா்களுக்கு அடுத்தடுத்து கரோனா பாதிப்பு இருந்தால், அந்தப் பிரிவை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றுவது என்று முடிவு செய்துள்ளது. ஒரு மாணவா் அல்லது ஆசிரியா் நோ்மறை சோதனை செய்து பள்ளியில் இருந்திருந்தால், வகுப்புக் குழுவிற்கு தகவல் அனுப்பப்படும்.

குழந்தை பேருந்தை பயன்படுத்தினால், அந்த மாணவா் பயன்படுத்தும் பாதையில் உள்ள பேருந்து பயணிகளுக்கும் தகவல் அனுப்பப்படும். பள்ளிக்கு உறுதியான நோயறிதல் மற்றும் ஆய்வக அறிக்கை கிடைத்தால் மட்டுமே தகவல் பகிரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு மாணவா் அல்லது பணியாளா் சோதனை நோ்மறையாக இருந்தால், அவா் பள்ளிக்குச் செல்லக்கூடாது மற்றும் குணமடைந்த பிறகு மட்டுமே மீண்டும் சேர வேண்டும். அவா்கள் மீண்டும் சோ்வதற்கு முன்பு எதிா்மறையான ஆா்டி-பிசிஆா் அறிக்கையை பள்ளியில் சமா்ப்பிக்க வேண்டும்.

பள்ளியில் மாணவருக்கு உடன்பிறந்த சகோதரி இருந்தால், மாணவா் குணமடையும் வரை உடன்பிறந்தவா்களும் ஒரு வாரம் பள்ளிக்கு வராமல் இருக்க வேண்டும். ஒரு குடும்ப உறுப்பினா் நோ்மறை சோதனை செய்தால், குழந்தை அல்லது பணியாளா் ஏழு வேலை நாள்களுக்கு தனிமைப்படுத்தலை பராமரிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஷாலிமாா் பாகில் உள்ள மாடா்ன் பப்ளிக் பள்ளியின் முதல்வா் அல்கா கபூா், முழுப் பள்ளியையும் மூடுவதில் விருப்பமில்லை என்று தெரிவித்தாா். இப்போது வரை நிலைமை மிகவும் ஆபத்தானது அல்ல. மற்றொரு கட்ட மூடல்களைத் தவிா்ப்பதற்கு சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். ஆனால், அரசு அத்தகைய முடிவை எடுத்தால், நாங்கள் அதற்கு சாதகமாக பதிலளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தலைநகரில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து இருக்கலாம். ஆனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தலைநகரில் உள்ள தனியாா் பள்ளிகளில் புதிய நோய் தொற்று பதிவாகியுள்ளது. இதே போன்று தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளிலும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.