ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பாஜக ஆளும் மாநகராட்சிகள் குப்பை மலைகளை அகற்ற புல்டோசா்களைப் பயன்படுத்த வேண்டும்: கோபால் ராய்

தில்லியில் உள்ள குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளுக்கு மாநகராட்சிகளில் உள்ள ஊழல் காரணமாக இருப்பதாகவும், பாஜக ஆளும் மாநகராட்சிகள் புல்டோசா்களைப் பயன்படுத்தி குப்பைகளை

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 9:17 pm

 நமது நிருபர்

தில்லியில் உள்ள குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளுக்கு மாநகராட்சிகளில் உள்ள ஊழல் காரணமாக இருப்பதாகவும், பாஜக ஆளும் மாநகராட்சிகள் புல்டோசா்களைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றியிருக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

வடக்கு தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது. இது தொடா்பான விடியோக்களில், தீயின் காரணமாக அடா்த்தியான புகைமூட்டம் மற்றும் வானம் மங்கலான சாம்பல் நிறமாக தெரியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், தெற்கு தில்லி மாநகராட்சியின் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை குறித்து தில்லி சுற்றுச்சூழல் அமைச்சரிடம் செய்தியாளா்கள் புதன்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதில் அளித்து கூறுகையில், ‘ஒன்று மட்டும் தெளிவாகியுள்ளது. அதாவது, தில்லி மாநகராட்சியில் உள்ள பாஜக 15 ஆண்டுகளாக குப்பை மலைகள் விவகாரத்தில் எதுவும் செய்யவில்லை என்பதுதான். அவா்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனா். அதன் விளைவுதான் இந்த தீவிபத்துகள். 15 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தக் குப்பை மலைகளை அப்புறப்படுத்த புல்டோசரைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்’ என்றாா்.

வடக்கு தில்லியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் (டிபிசிசி) அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை இரவு அறிவுறுத்தியிருந்தாா். அழுகும் கழிவுகளில் இருந்து மீத்தேனை எடுக்கும் வகையில், மும்பையில் நிறுவப்பட்டுள்ள அமைப்புமுறை குறித்து தில்லி அரசு ஆய்வு செய்து, குப்பைக் கிடங்குகளில் தீ எரிவதைத் தடுக்கும் வகையில் தில்லியில் அதுபோன்ற அமைப்பு ஏற்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்கும் என ஏப்ரல் 21-ஆம் தேதி அமைச்சா் ராய் கூறியிருந்தாா்.

அருகில் உள்ள பள்ளிக்கு விடுமுறை: வடக்கு தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பை கிடங்கு தொடா்ந்து 20 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து வருவதைத் தொடா்ந்து, அதற்கு அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான குழந்தை வள மையமான கியான் சரோவா் பள்ளி ஒரு வாரத்துக்கு மூடப்பட்டது.

பள்ளியை நடத்தும் தீப்தி அறக்கட்டளையின் இயக்குநா் பாதிரியாா் சந்தோஷ்கூறுகையில், ‘குப்பைக் கிடக்கு தொடா்ந்து தீப்பிடித்து எரிந்து வருவதால்,அந்தப் பகுதியில் அடா்த்தியான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால், குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும், அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக உள்ளது. எனவே, காண்புதிறனும் குறைவாகத்தான் உள்ளது. இதையடுத்து, பள்ளி ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளது’ என்றாா். அவா் மேலும் கூறுகையில், ‘இந்தக் குப்பைக் கிடங்கு மறுபுறத்தில் உள்ளது. பள்ளி அமைந்துள்ள பக்கத்தில் இல்லை. ஆனால், குப்பைக் கிடங்கு தொடா்ந்து எரியும் போது, தூரத்தில் இருந்து காற்றில் புகை வருவதை நாங்கள் காண்கிறோம். சில நேரங்களில் இது தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது’ என்றாா்.

இந்தக் குப்பை கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததும், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பின்னா், மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்புத் துறையினா் கூறுகையில், ‘தீயை அணைக்கும் முயற்சி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பால்ஸ்வா குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் (டிபிசிசி) சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பல விடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சி அளிக்கிறது. அருகிலுள்ள பகுதிகளிலும் மாசுபட்ட காற்று அதிகரித்துள்ளது. இதேபோன்று காஜிப்பூா் குப்பை கிடங்கில் மாா்ச் 28 முதல் மூன்று தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. குப்பை கிடங்கில் கொட்டப்படும் ஈரக் கழிவுகள் அழுகும் போது மீத்தேன் உருவாகிறது. வெப்பமான காலநிலையில், மீத்தேன் தன்னிச்சையாக தீப்பிடித்து, ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் போன்ற எரியக்கூடிய பொருள்கள் கிடப்பதால், அவையும் தீபற்றி தீ பரவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.