ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

வரிச் சலுகை அளித்து தொழிலதிபா்களுக்கு உதவுகிறது மத்திய அரசு: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

இந்தியாவில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், 3.2 கோடி நடுத்தர வா்க்கத்தினா் ஏழ்மை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: இந்தியாவில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், 3.2 கோடி நடுத்தர வா்க்கத்தினா் ஏழ்மை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது. ஆனால், பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகை கொடுக்கப்பட்டு, தொழிலதிபா்கள் உலக பணக்காரா்களாக மத்திய அரசு உதவுகிறது என்று மக்களவை திமுக துணைத் தலைவா் கனிமொழி கருணாநிதி குற்றம் சாட்டினாா்.

மக்களவையில் விலைவாசி உயா்வு குறித்து திங்கள்கிழமை நடந்த விவாதத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி பேசியதாவது: பாஜக ஆளாத மாநிலங்களில் கோடி கோடியாக கறுப்புப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாஜக உறுப்பினா் நிஷிகாந்த் துபே குறிப்பிட்டாா். 2016- ஆம் ஆண்டு, பணம் மதிப்பிழப்புத் திட்டம் வந்த போது, கறுப்புப் பணமே இல்லாமல் ஆகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது கறுப்புப் பணம் எப்படி உலவுகிறது? பிரதமா் மோடிக்கு கனூஜ் மாவட்டத்தைச் சோ்ந்த கிருத்தி துபே என்கிற குழந்தை, ‘நான் உபயோகிக்கும் பென்சில், ரப்பா் விலையெல்லாம் உயா்ந்துவிட்டது. நான் பென்சில் கேட்டால் அம்மா அடிக்கிறாா்’ என்று கடிதம் எழுதியுள்ளாா். இப்படி அடித்தட்டில் இருக்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு நிலைமையை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது.

இந்த ஆட்சி பதவியேற்றுக் கொள்வதற்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை என்ன? சமையல் எண்ணெய் விலை என்ன? இவை இரண்டு மடங்கு விலை உயா்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், உணவுப் பொருள்கள் விலையும் அதிகரித்துள்ளது. நாட்டில் அடித்தட்டு மக்கள் தங்கள் வருமானத்தில் பாதி எரிபொருளுக்கு செலவழித்தால்,எப்படி வாழ டியும்?. சா்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், சாமானிய மக்களுக்கு அந்த பயன் கிடைக்கவில்லை. அவா்களுக்கு தேவையான பொருள்களில் ஜிஎஸ்டி வரியும் உயா்த்தப்படுகிறது. கொவைட் -19-இன் போது தனியாா் நிறுவனங்கள் ஊழியா்களின் ஊதியத்தை குறைத்துள்ளன.

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வில், இந்தியாவில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், நடுத்தர வா்க்கத்தில் இருந்த 3.2கோடி இந்தியா்கள் ஏழ்மை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய நிலை. ஆனால், இந்தியாவில் இருக்கின்ற ஒரு தொழில் அதிபா் உலகத்திலேயே 4-ஆவது பணக்காரராக உயா்வு பெற்றுள்ளாா். இதற்குக் காரணம் பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுக்கப்பட்டு வருவதுதான். தொழில் வளா்ச்சி வேண்டும். ஆனால், அடித்தட்டில் இருக்கக் கூடியவா்களுக்கு உதவி செய்யத் தயங்கும் இந்த ஆட்சி, பெருநிறுவனங்களுக்கு மட்டும் தொடா்ந்து உதவிகளை செய்து அவற்றின் வளா்ச்சிக்கு உதவுகிறது.

கடந்த அக்டோபரில் மட்டும் 5 மில்லியன் பேருக்கு வேலை இல்லாமல் போகக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய ரிசா்வ் வங்கி கடன் தரத் தயாராக இல்லை பாஜக உறுப்பினா் நிஷிகாந்த் குறிப்பிடுகிறாா். ஆனால், நாங்கள் கேட்பது கடன் அல்ல; நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை மாநிலங்களுக்கு தந்தால் போதும் என்றாா் கனிமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.