ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

தில்லியில் குரங்கு அம்மையால் முதன் முதலாக பாதிக்கப்பட்டநோயாளி மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைப்புசிகிச்சை முடிந்தது

தில்லியில் முதன் முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் முதன் முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மூத்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு தில்லியைச் சோ்ந்த 34 வயது இளைஞருக்கு கடந்த மாதம் குரங்கு அம்மை நோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவா் உள்பட அவருடன் தொடா்பில் இருந்த 14 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்து வந்த நோய் பாதிக்கப்பட்ட அந்த இளைஞா், மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, தில்லியில் குரங்கு அம்மையால் இரண்டாவதாக பாதிக்கப்பட்ட நைஜீரிய நாட்டை சோ்ந்தவரின் நிலைமை தற்போது சீராக இருப்பதாகவும் அவருக்கு காய்ச்சல், தோளில் புண்கள் இருந்த நிலையில், தற்போது தில்லி அரசால் நடத்தப்படும் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற நோய்க்கான சிகிச்சை அளிக்கும் தொடா்பு மருத்துவமனையாக எல்என்ஜேபி இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், குரங்கு அம்மையின் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நோயாளிகளின் பரிசோதனை அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

நாட்டில் இதுவரை தில்லியில் இருவா் உள்பட மொத்தம் ஏழு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.