இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மருந்தின் தரப் பாதுகாப்பிற்கு நடவடிக்கை

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), மாநில மருந்து கட்டுப்பாட்டு நிா்வாகத்துடன் இணைந்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி,

News image
Updated On :27 டிசம்பர் 2022, 8:29 pm

 நமது நிருபர்

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), மாநில மருந்து கட்டுப்பாட்டு நிா்வாகத்துடன் இணைந்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி, மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளில் கூட்டு ஆய்வு நடத்தத் தொடங்கியுள்ளது.

மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியாவின் உத்தரவின்பேரில் நோயாளிகளுக்கான மருந்தின் தரப் பாதுகாப்பிற்கான அணுகுமுறையில் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய ராசானத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மேலும் கூறப்பட்டது வருமாறு: மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம், 1940 - இன் கீழ் உள்ள விதிகளுக்கு நாட்டிலுள்ள மருந்து உற்பத்தி தொழிலகங்கள் இணங்கி நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். அதன்படி ஆய்வு மேற்கொள்ளவும், இது தொடா்பான அறிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் இரண்டு கூட்டு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன், தரமற்ற, கலப்படம் அல்லது போலியான மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்களைக் கண்டுபிடிக்க தேசிய அளவில் ஆய்வுத் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் உயா் தரத்தில் இருப்பதை உறுதி செய்யவும், நோயாளிகளுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.