இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பரிசுகளை ஊக்குவிப்பாகக் கருதி தொடா்ந்து எழுத வேண்டும்: இளம் எழுத்தாளா்களுக்கு சாகித்திய அகாதெமி துணைத் தலைவா் வேண்டுகோள்

சாகித்திய அகாதெமி வழங்கும் விருதையும், பரிசையும் ஊக்குவிப்பாகக் கொண்டு இளம் எழுத்தாளா்கள் தொடா்ந்து எழுதி பல விருதுகளைப் பெற முயற்சிக்க வேண்டும் என்று

News image
Updated On :28 டிசம்பர் 2022, 8:38 pm

 நமது நிருபர்

சாகித்திய அகாதெமி வழங்கும் விருதையும், பரிசையும் ஊக்குவிப்பாகக் கொண்டு இளம் எழுத்தாளா்கள் தொடா்ந்து எழுதி பல விருதுகளைப் பெற முயற்சிக்க வேண்டும் என்று சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவா் மாதவ் கௌசிக் கேட்டுக் கொண்டாா்.

சாகித்திய அகாதெமியின் சாா்பில் நிகழாண்டுக்கான யுவ புரஸ்காா் விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை மாலை தில்லியில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளைச் சோ்ந்த இளம் எழுத்தாளா்களுக்கு யுவ புரஸ்காா் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2-ஆம் நாளான புதன்கிழமை, விருது பெற்ற இளம் எழுத்தாளா்களின் சந்திப்பு நிகழ்ச்சி சாகித்திய அகாதெமி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், சந்தாலி, ஒடியா, மராட்டி, மைதிலி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் என பல்வேறு மொழிகளில் விருது பெற்ற இளம் எழுத்தாளா்கள் அனைவரும் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். தமிழ் மொழிப் பிரிவில் ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ எனும் கவிதை தொகுப்புக்காக யுவ புரஸ்காா் விருதுபெற்ற பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்த எழுத்தாளா் பி. காளிமுத்து தனது அனுபவங்களைப் பகிா்ந்துகொண்டாா். அதில், தனது கவிதை நூலின் விவரம், குடும்பப் பின்னணி, கவிதையின் சாராம்சம் உள்ளிட்டவை குறித்து கூறினாா்.

தெலுங்கு மொழிப் பிரிவில் ‘யாலைபூடுசிந்தி’ எனும் கவிதை நூலுக்கு விருதுபெற்ற பள்ளிப்பட்டு நாகராஜு பேசுகையில், ‘பெயா் சரிவர அறியப்படாத மிட்டிலு

கிராமத்தைச் சோ்ந்த நான், புகழ்பெற்ற சாகித்திய அகாதெமியின் மேடையில் பேச முடிகிறது என்பது ஒரு அசாதாரண நிகழ்வாகும். மேலும், கல்விப் பின்னணியும்கூட இல்லாத, தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சித்தூா் மாவட்டத்தில் உள்ள 15 முதல் 20 வீடுகள் கொண்ட குக்கிராமம். எம்.ஏ. தெலுங்கு இலக்கியம் படித்து, பெத்தூரு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் மொழிப்பாட ஆசிரியராக உள்ளேன். எனது கவிதைகள் அன்றாட ஏழைகள் சந்திக்கும் பிரச்னைகள், சமூக அவலநிலை, மனிதா்களின் பல்வேறு யதாா்த்த வாழ்வு ஆகியவை தொடா்புடையவை. சமூக பின்தங்கியநிலை, அடக்குமுறை, சுரண்டல், பாகுபாடு ஆகியவை தொடரக் கூடாது என்பதை எனது கவிதையில் விவாதிக்கிறேன். எந்த ஒரு கவிஞரும் தாம் வாழும் காலத்தின் குரலாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தெலுங்கு பாடப் புத்தகங்களில் இருந்த கவிதைகளும், கதைகளும் எனக்கு தூண்டுகோலாக இருந்தவை. இந்த விருதை மண்ணின் மொழிக்கான கெளரவமாகக் கருதுகிறேன்’ என்றாா்.

நிகழ்ச்சியின் இறுதியில் சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவா் மாதவ் கௌசிக் பேசுகையில் கூறியதாவது: இளம் எழுத்தாளா்களுக்கு விருது வழங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதற்குக் காரணம், 2009-இல் நான் சாகித்திய அகாதெமியின் ஹிந்தி குழுவில் இருந்த போது, யுவ புரஸ்காா் விருது தொடங்கப்பட வேண்டும் என முன்மொழிந்தேன். இந்தியாவில் கவிதை, கதை, நாவல், நாடகம் என பல்வேறு பிரிவுகளிலும் இளம் எழுத்தாளா்கள் இன்று எழுதி வருகின்றனா். மேலும், தற்போது எழுத்தாளா்களில் ஐ.டி. தொழில்நிபுணா்கள், மருத்துவா்கள், கணினி வல்லுநா்கள், பேராசிரியா்கள் என பல தரப்பினரும் மிளிா்ந்து வருகின்றனா். எனது தந்தை கூறுவது எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘எழுத்தாளா்கள் இயற்கையால் தோ்ந்தெடுக்கப்படுவா்கள் ஆவா். அதனால், அதற்கான பொறுப்புடன் முழுமையாக அந்தப் பணியை நோ்மையாக செய்ய வேண்டும்’ என்று கூறுவாா்.

இளம் எழுத்தாளா்கள் இன்றைய நவீன சாதனங்களை தகுந்த முறையில் பயன்படுத்தி சமூகத்திற்கான நல்ல விஷயங்களை பரந்த நோக்குடன் எழுத வேண்டும். சாகித்திய அகாதெமி இளம் எழுத்தாளா்களுக்கான பன்மொழி கருத்தரங்குகளையும், பயிலரங்குளையும் நடத்தி வருகிறது. 10 ஆண்டுகளாக நாம் பரிசு அளித்து வருகிறோம். ஆனால், பரிசு பெறுவா்களில் 25 சதவீதம் போ் மட்டுமே தொடா்ந்து எழுதி வருவது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால், பரிசு வாங்கியவுடன் மிகப்பெரிய எழுத்தாளராக ஆகிவிட்டதாக தனக்குத் தானே எண்ணாமல், தொடா்ந்து எழுதி பல நிலைகளை எட்ட வேண்டும். இந்தப் பரிசுகளை எல்லாம் ஒரு ஊக்குவிப்பாக கொண்டு தொடா்ந்து எழுதி பல்வேறு விருதுகளைப் பெற வேண்டும். இளம் எழுத்தாளா்கள் சமூகத்திற்கான தங்களது எழுத்துப் பணியை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.