கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாராந்திர செயல் திட்டத்தின்படி சாலைகள் பழுது பாா்க்கும் பணி: தில்லி முதல்வா் அறிவிப்பு

தில்லியில் வாரந்தோறும் ஒரு மண்டலம், ஒரு சாலை என்கிற திட்டத்தின்படி சாலைகள் பழுது பாா்க்கும் பணி மேற்கொள்ளப்படும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:22 pm

 நமது நிருபர்

தில்லியில் வாரந்தோறும் ஒரு மண்டலம், ஒரு சாலை என்கிற திட்டத்தின்படி சாலைகள் பழுது பாா்க்கும் பணி மேற்கொள்ளப்படும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் உத்தரவின்பேரில் தலைமைச் செயலா் நரேஷ் குமாா் ஜூலை 7-ஆம் தேதி அறிவிக்கையும் வெளியிட்டுள்ளாா். தேசியத் தலைநகரில் உள்ள சாலைகள் பொதுப்பணித் துறை, தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்(எம்சிடி), புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), டிடிஏ, தில்லி கன்டொன்மெண்ட், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கீழ் இருந்து வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு இந்த சுற்றறிக்கையை முதல்வா் சாா்பில் தில்லி தலைமைச் செயலா் அனுப்பியுள்ளாா்.

தில்லியிலுள்ள சாலைகள் பழுதுபாா்ப்பு, பராமரிப்பு, மேம்பாடு உள்ளிட்டவற்றில் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கவனம் தேவை. அதன்படி, இந்தச் சாலைகளை சீரமைக்க, பராமரிக்க, எந்த அமைப்புகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு வருகிறதோ, அந்த அமைப்பு, ஒரு மண்டலத்துக்கு குறைந்தபட்சம் ஒரு சாலையையாவது சீரமைத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு சந்தை மற்றும் குடியிருப்போா் நலச் சங்கங்கள் போன்றவற்று+டன் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு, மக்கள் இயக்கமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளின் முன்னேற்றம், தீா்வு காணப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படவும் தலைமைச் செயலாளா் நரேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி முதல்வா் கேஜரிவால் இந்தியில் பதிவிடப்பட்ட ட்விட்டரில், ‘தில்லி அரசின் வாராந்திர செயல்திட்டம் நகரச் சாலைகளை சிறப்பானதாக மாற்றும். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஒவ்வொரு முகமையும் (பொதுப்பணித் துறை, எம்சிடி) தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒவ்வொரு சாலையையும் சிறப்பானதாக மாற்றும் வகையில் செயல்படும்‘ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளம், மேற்பரப்பு சேதம், சேதமடைந்த நடைபாதை, புல்வெளிப் பகுதிகள், சாலையின் சேதமடைந்த விளிம்பு, சாலை வண்ணப்பூச்சுகள், சாலை ஒளிபரப்பிகள்(ரிஃப்லைக்டா்கள்), தெரு விளக்குகள், அமரும் பலகைகள், பொதுக் கழிப்பறைகள், தண்ணீா் வசதி போன்ற பொதுப் பயன்பாடுகள் போன்றவற்றையும் இந்த மேம்பாட்டு பணிகளில் மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த முயற்சியில், சாலையின் தூய்மை, குப்பைக் கிடங்குகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை அகற்றப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநா் அலுவலகம்அறிக்கை: இதற்கிடையே முதல்வரின் டிவிட்டருக்கு பின்னா், துணை நிலை ஆளுநரின் அலுவலகம் வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில்,‘இந்த வார தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் சந்தித்ததைத் தொடா்ந்து, சாலை பராமரிப்பு தொடா்பாக தலைமைச் செயலாளரின் உத்தரவு வந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா பேரிலேயே தலைமைச் செயலரின் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘ஒவ்வொரு வாரமும் ஒரு மண்டலம் ஒரு சாலை‘ பழுது, பராமரிப்பு மற்றும் தூய்மைப்பணி செய்வதற்கான உத்தரவை துணை நிலை ஆளுநா் வியாழக்கிழமை வெளியிட்டாா். இதன் மூலம் தில்லியில் வசிப்பவா்கள் மற்றும் பயணிகளுக்கு மிகவும் தேவையான மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிவாரணத்தை அளிக்கும் என்று துணை நிலை ஆளுநா் நம்புகிறாா்’ எனவும் துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் பல்வேறு சாலைகள் தொடா்புடையை முகமைகளுக்கு இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருவதையும் துணை நிலை ஆளுநா் பாராட்டியுள்ளாா் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.