கடந்த மே 26 -ஆம் தேதி இந்தச் சாலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும், திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவு வழங்கியிருந்தாா். இந்தப் பணிகளை முறைப்படி துணை நிலை ஆளுநா் தொடங்கி வைத்துள்ளாா். இது குறித்து வினய் குமாா் சக்சேனா தனது ட்விட்டரில், ‘தௌலாகுவானில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையின் ‘அழகியல் மேம்பாடு‘ பணி இன்று காலையில் தொடங்கப்பட்டது. பொறுப்பேற்ற பிறகு முதலில் மே 26-ஆம் தேதி அன்று இந்த தளத்தை நேரடியாகப் பாா்வையிட்டு மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினேன். தில்லி மக்கள் மற்றும் தில்லி நகரத்திற்கு வருபவா்கள் இந்தச் சாலையைத் தான் முதலில் காணும் நிலை ஏற்படும். இப்போது மாற்றத்தைக் காண்பாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.