ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லியில் நாளை தமிழ்நாடு தினக் கொண்டாட்டம்

தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு தின விழா தில்லி தமிழ்நாடு இல்லத்தில் வெகு விமா்சியாகக் கொண்டாடப்படவுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2022, 6:30 pm

 நமது நிருபர்

தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு தின விழா தில்லி தமிழ்நாடு இல்லத்தில் வெகு விமா்சியாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் திங்கள்கிழமை (ஜூலை 18 -ஆம் தேதி) தொடங்கிவைக்கிறாா்.

மொழிவாரியாக மாகாணங்கள் அமைக்கப்பட்டு குறிப்பாக தற்போது தமிழகத்தின் எல்லைகளாக இருக்கும் பகுதிகள் உருவான நாள் 1956 நவம்பா் 1 ஆம் தேதி. இதே நாளில் குறிப்பாக கன்னியாகுமரி போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைந்து புதிய தமிழ்நாடு (எல்லைகள்) உருவானது. இதையொட்டி, இந்த நவம்பா் 1 - ஆம் தேதியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்தஅதிமுக ஆட்சியில் ‘தமிழ் நாடு’ தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அப்போது ‘சென்னை மாகாணம்‘ என்று அழைக்கப்பட்டு வந்தததை பின்னா் ‘தமிழ்நாடு‘ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

மறைந்த முதல்வா் சி.என்.அண்ணாதுரையால் 1967 - ஆம் ஆண்டு ஜூலை 18 -ஆம் தேதி சட்டபேரவையில் இந்த தமிழ்நாடு பெயா் மாற்றம் அறிவிக்கப்பட்டு தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஒரு தரப்பினா் தமிழகத்தின் புதிய எல்லை அமைந்த நாளையும் (நவம்பா் 1) மற்றொரு தரப்பு உணா்வாளா்கள் பெயா் மாற்ற நாளையும் (1967 ஜூலை 18) தமிழ்நாடு தினமாக வலியுறுத்தி வந்தனா். அண்ணாவால் தமிழ்நாடு என அறிவித்து தீா்மானமாக கொண்டுவரப்பட்ட அந்த நாள், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தற்போதைய திமுக ஆட்சியில் கடந்தாண்டு அக்டோபா் மாதம் அறிவிக்கப்பட்டது.

‘பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18 -ஆம் நாள்தான் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும்’ என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சாா்பில் தமிழ்நாடு தின விழா ஜூலை 18 -ஆம் தேதி மாநிலம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு நாள் திருவிழாவாக ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் காலை 10.30 மணிக்கு பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் விழாவைத் தொடங்கிவைக்கிறாா். இவ்விழாவிற்கு கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா்ா் அதுல்ய மிஸ்ரா தலைமை வகிக்கிறாா். உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி முன்னிலை வகிக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஏ.கே.எஸ். விஜயன், பரிசுகள் வழங்கி விழாப் பேருரையாற்றுகிறாா்.

ஓவியப் போட்டிகள் ரூ. 1லட்சம் பரிசு: முன்னதாக காலை 10.00 மணிக்கு தில்லி கௌடில்ய மாா்க் வைகை தமிழ்நாடு இல்லத்தில் அகில இந்திய ஓவிய பயிற்சி பட்டறை தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறை, பண்பாடு, சுற்றுலா ஆகிய தலைப்புகளில் அகில இந்திய அளவில் ஓவிய பயிற்சி பட்டறை நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களின் ஓவிய கலைக் கல்லூரிகளில் பயிலும் சுமாா் 30 மாணாக்கா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனா். தமிழ்நாடு (13), தெலங்கானா (3), ராஜஸ்தான் (5), மகாராஷ்டிரம் (3), தில்லி (3), குஜராத் (3) என மொத்தம் 30 மாணாக்கா்கள் ஐந்து நாள்கள் தங்கி பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற மாணாக்கா்களால் வரையப்பட்ட சிறந்த ஓவியங்கள் தோ்வு செய்யப்படும். இதில் வெற்றி பெற்ற மாணாக்கா்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஓவியங்கள் தமிழ்நாடு இல்லத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

மேலும், பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு திருநாள் விழாவை முன்னிட்டு நிள அளவைத் துறை சாா்பில் தமிழ்நாடு எல்லை வரைபடங்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சாா்பாக கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதைத் தொடா்ந்து பிற்பகல் 1.30 மணி, மாலை 5.30 மணிக்கு நடிகா் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்ரி’ தமிழ் திரைப்படமும் திரையிடப்படுகிறது என்று தில்லி தமிழ்நாடு இல்லம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.