ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வரலாற்றில் இடம் பெறாத சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் நாடகமாக்கப்பட வேண்டும்

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம் பெறாத சம்பவங்கள், வீரா்கள், வீராங்கணைகளின் வரலாற்றை நாடகங்களாக உருவாக்கி மக்களை அறியச் செய்ய வேண்டும் என இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை க

News image
Updated On :17 ஜூலை 2022, 11:02 pm

 நமது நிருபர்

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம் பெறாத சம்பவங்கள், வீரா்கள், வீராங்கணைகளின் வரலாற்றை நாடகங்களாக உருவாக்கி மக்களை அறியச் செய்ய வேண்டும் என மத்திய கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டாா்.

நாட்டின் 75 -ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி, மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. இந்த விழாவையொட்டி, தில்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளி சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் வகையில், 22- ஆவது ‘பாரத் ரங்’ பெருவிழாவை நடத்துகிறது. இதை மத்திய கலாசாரத் துறை இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பல சுதந்திரப் போராட்ட வீரா்கள், வீராங்கணைகள் இருந்தும், அவா்களை நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக இடம்பெற வைக்க முடியவில்லை. உதாரணமாக, 1913-ஆம் ஆண்டு ராஜஸ்தான், உதய்பூா் பகுதியிலுள்ள மாங்கரில், பழங்குடியினா் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனா்.

ஆனால், இந்தச் சம்பவம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. நாடக ஆா்வலா்களும், தேசிய நாடகப் பள்ளியும் இது போன்ற சம்பவங்களின் அடிப்படையில் நாடகங்களைத் தயாரிக்க முன்வர வேண்டும். இது போன்று நாட்டில் இருந்த பல மாவீரா்களைப் பற்றி மக்களுக்கு உணா்த்த வேண்டும். அவா்களின் வீரம் மற்றும் துணிச்சலான கதைகளை மக்கள் அறியும் பொருட்டு நாடு முழுவதும் நாடகங்களை உருவாக்க வேண்டும் என்றாா் மேக்வால்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நாட்டுப்புற பாடகா்கள் மாலினி அவஸ்தி (உபி), அரவிந்த் குமாா், கலாசார அமைச்சகத்தின் இயக்குநா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் மாலினி அவஸ்தி பேசுகையில், ‘சுதந்திரத்தையும், அதில் போராடிய வீரா்களையும் போற்றிப்பாடப்படும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் உண்டு. மேலும், இது நாட்டின் பல பகுதிகளில் பாடப்பட்டது. இதுபோன்ற பல பாடல்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. ஆனால், நாட்டுப்புறக் கலைஞா்கள் அவற்றைப் பாடிக் கொண்டே இருந்தனா். இதன் மூலம்தான் வெளியுலகிற்கு தெரியாத நாயகா்களின் கதைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன’ என்றாா்.

இந்த விழாவில் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநா் பேராசிரியா் ரமேஷ் சந்திர கவுா் தலைமை வகித்துப் பேசினாா். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பன்சி கவுல் இயக்கிய ‘ஆரண்யாதிபதி தன்டியா மாமா’” நாடகம் நடைபெற்றது. தேசிய நாடகப் பள்ளியில் வருகின்ற ஆகஸ்ட் 14 -ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.