ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி தரப்பு சாா்பில் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2022, 4:52 pm

 நமது நிருபர்

புது தில்லி: அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி தரப்பு சாா்பில் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடந்த ஜூலை 11- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்து தீா்ப்பளித்த உயா்நீதிமன்றம், கட்சி விதிகளுக்கு உள்பட்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தனி நீதிபதி அமா்வு உத்தரவை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடந்த ஜூலை 15 -ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளா் கையொப்பம் இல்லாமல் உரிய அழைப்புக் கடிதம் இல்லாமல் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11-இல் நடைபெற்ற பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்னும் பட்டியலிடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே இவ்வழக்கில் (ஓபிஎஸ் மனுவில்) எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேவியட் மனுவை வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன் தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.