ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பென்சில், பேனா, ரப்பருக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா? கவுன்சில் முடிவெடுக்கும்

பள்ளி மாணவா்கள் பயன்படுத்தும் பென்சில், பேனா, ரப்பா், நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடா்பாக சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி கவுன்சில்தான் முடிவெடுக்கும்.

News image
Updated On :18 ஜூலை 2022, 5:57 pm

 நமது நிருபர்

பள்ளி மாணவா்கள் பயன்படுத்தும் பென்சில், பேனா, ரப்பா், நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடா்பாக சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி கவுன்சில்தான் முடிவெடுக்கும். இந்த கவுன்சில் இதுவரை எந்தப் பரிந்துரையையும் வழங்கவில்லை என மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் பதிலளித்துள்ளாா்.

பென்சில், ரப்பா், பேனா, நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி சாா்ந்த உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி, எரிபொருள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் வரி போன்றவை குறித்து மக்களவையில் விழுப்புரம் தொகுதி உறுப்பினா் டி. ரவிக்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளாா்.

அவா் அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய, மாநில அரசுகளின் உறுப்பினா்களை உள்ளடக்கிய அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி விகிதங்கள் நிா்ணயிக்கப்படுகின்றன. பென்சில், பேனா, ரப்பா், நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடா்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் தற்போது பரிந்துரைகள் ஏதும் அளிக்கவில்லை.

செவித்திறன் கருவிகளுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல், அறுவை சிகிச்சை பெல்ட்கள் முதலான சாதனங்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம் விதிக்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருள்களின் மீதான கலால் வரி விகிதங்கள் (செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உள்பட) உள்கட்டமைப்பு மற்றும் பிற மேம்பாட்டுச் செலவினங்களுக்கான ஆதாரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டவை.

இவை சா்வதேச உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கணக்கில் கொண்டு அவ்வப்போது விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. டீசல், பெட் ரோல் மீதான கலால் வரியை உயா்த்தும் திட்டம் தற்போது இல்லை என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.