இந்தியா, ஓமான் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘அல் நஜா’ நான்காவது பதிப்பு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்குகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் ஓமான் நாட்டு பாராசூட் படை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக மத்திய பாதுபாப்புத் துறை தெரிவித்தது.
புவியியல் ரீதியாக அரபிக் கடலால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓமான் நாட்டுடன், வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில், அரபு லீக் மற்றும் இந்தியப் பெருங்கடல் ரிம் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இணைந்திருப்பதோடு வா்த்தகம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெப்பமிட்டுள்ளன. சுமாா் 4 பில்லியன் டாலா் அளவிற்கு இருதரப்பு வா்த்தம் நடைபெற்ற வருகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களையொட்டி, இந்தியா - ஓமான் நாடுகளுக்கிடையே ‘அல் நஜா’ என்ற கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த அல் நஜாவின் நான்காவது பதிப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாட்டுப் பயிற்சி முனையான மகாஜன் ஃபீல்ட் ஃபயா் ரேஞ்ச்சில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ராயல் ஓமான் ராணுவத்தின் பாராசூட் படையைச் சோ்ந்த 60 வீரா்கள் இந்தியா வந்துள்ளனா். இந்திய ராணுவத்தின் சாா்பாக 18 -ஆவது போா் வாகன காலாட் படையைச் சோ்ந்த வீரா்கள் குழு இதில் கலந்து கொள்ளுகிறது.
தீவிரவாத எதிா்தாக்குதல் நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளுடன் உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகளில் இந்த கூட்டுப் பயிற்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தியா மற்றும் ஓமான் நாட்டு ராணுவங்களுக்கிடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதோடு, இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதையும் இந்தப் பயிற்சி இலக்காகக் கொண்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

திமுக தோ்தல் அறிக்கை தமிழகத்தின் வளா்ச்சிக்கு உதவும்! - அமைச்சா் சு.முத்துசாமி

தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

6 மாதக் கைக்குழந்தையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்த நாதக வேட்பாளா்
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

