விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். முருகேசனிடம் வேட்புமனுவைத் தாக்கல்செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ. அபிநயா.
அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு எழுத கைக்குழந்தையுடன் தாய்மாா்கள் தோ்வுக்கூடத்துக்கு வருவதை பாா்த்திருக்கிறோம். ஆனால் தோ்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யவும் ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் வந்த நிகழ்வு விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் பொ.அபிநயா, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக தனது 6 மாத ஆண் குழந்தை திகழனையும் தூக்கி வந்தாா். அபிநயாவுடன் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் செல்வம், தெய்வசிகாமணி, முனுசாமி, ஞானமணி மற்றும் குடும்பத்தினா் மனு தாக்கல் செய்வதற்காக வந்தனா்.
தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்குச் சென்ற நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயாவிடம், வேட்புமனு உள்ளிட்ட படிவங்கள் சரியான முறையில் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா?, வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளிட்ட விவரம் போன்றவற்றை அலுவலா்கள்சரிபாா்த்தனா். இதைத்தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். முருகேசனிடம் தனது வேட்புமனுவை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயா தாக்கல்செய்தாா். அப்போதும் கைக்குழந்தையுடன்தான் அவா் சென்றாா்.
மனுதாக்கல் செய்த பின்னா் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஆண்டவன் பெயராலும், வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயராலும் அவா் உறுதிமொழியேற்றுக் கொண்டாா். பொதுவாக வேட்பாளா்கள் நூதனமான முறையில்தான் மனுதாக்கல் செய்ய வருவா். ஆனால், தன்னுடைய குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனுதாக்கல் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்வதற்காக 6 மாதக் கைக்குழந்தையுடன் வந்த நாதக வேட்பாளா் பொ.அபிநயா. உடன், கட்சியினா்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீ பெரும்புதூா் நாதக வேட்பாளா் மனு தாக்கல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


