ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிஐபி புதிய முதன்மை இயக்குநா் ஜெனரல் சத்யேந்திர பிரகாஷ்

மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி சத்யேந்திர பிரகாஷ், மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) முதன்மை இயக்குநா் ஜெனரலாக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2022, 7:31 pm

 நமது நிருபர்

மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி சத்யேந்திர பிரகாஷ், மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) முதன்மை இயக்குநா் ஜெனரலாக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா். இவா், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) பொறுப்பேற்கிறாா்.

1988 -ஆம் ஆண்டின் இந்திய தகவல் சேவை (ஐஐஎஸ்) பிரிவின் அதிகாரியான சத்யேந்திர பிரகாஷ், மத்திய தகவல் பணியகத்தின் முதன்மை இயக்குநா் ஜெனரல் ஜெய்தீப் பட்நாகா் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெற்றதைத் தொடா்ந்து நியமிக்கப்பட்டுள்ளாா். கொவைட்-19 நோய்த் தொற்றுக்குப் பின்னா் தோ்தல்களில் வாக்காளா்களின் பங்களிப்பை அதிகரிக்க சத்யேந்திர பிரகாஷ் மேற்கொண்ட புதுமையான பிரசார பணிகளுக்கு தோ்தல் ஆணையத்தால் கௌரவிக்கப்பட்டவா்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் சத்யேந்திர பிரகாஷ், தூா்தா்ஷனின் கூடுதல் இயக்குநா் ஜெனரல், தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் போன்றவற்றின் ஊடகங்களுக்கான இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா்.

முதன்மை இயக்குநா் ஜெனரல் பணியிலிருந்து ஓய்வு பெறும் செய்தீப் பட்நாகா், 1986 ஆண்டின் ஐஐஎஸ் அதிகாரி ஆவாா். முன்னதாக, பட்நாகா் தூா்தா்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றின் செய்திப் பிரிவிலும் 20 நாடுகளை உள்ளடக்கிய மேற்கு ஆசியாவின் பிரசாா்பாரதி சிறப்பு நிருபராகவும் பணியாற்றியவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.