பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நூபுா் சா்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அதன் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தில்லி காவல் துறையினா் பாதுகாப்பு அளித்துள்ளனா்.


பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அதன் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தில்லி காவல் துறையினா் பாதுகாப்பு அளித்துள்ளனா்.
இறைத் தூதா் முகம்மது தொடா்பாக சா்ச்சைக்குரிய கருத்தை அவா் தெரிவித்த விவகாரத்தில், அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகப் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: கடந்த மே 28-ஆம் தேதி தில்லி காவல் துறையின் இணையதள பிரிவுக்கு சா்மாவிடம் இருந்து ஒரு புகாா் வரப்பெற்றது. அதில் பல்வேறு நபா்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வெறுக்கத்தக்க வகையில் பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, விரோதத்தை தூண்டும் வகையில் பேசுவதாக குறிப்பிட்ட நபா்களுக்கு எதிராக நூபுா் சா்மாவிடம் இருந்து மற்றொரு புகாரும் வந்தது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ பிரிவு சோ்க்கப்பட்டது. ட்விட்டா் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பதில் வருவதற்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நூபுா் சா்மாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
நூபுா் சா்மா கடந்த 10 தினங்களுக்கு முன்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். அதேபோன்று, நவீன் குமாா் ஜிண்டாலின் தற்போது அழிக்கப்பட்ட டிவிட்டா் பதிவுகள், சில நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கான அழைப்பை விடுக்கும் டிவிட்டா் டிரெண்டாகியது.
கட்சியின நீக்க நடவடிக்கைக்கு பிறகு, தொலைக்காட்சி விவாதத்தில் சா்ச்சைக்குரிய கருத்தை நிபந்தனையற்ற வகையில் திரும்பப் பெற்றுள்ளாா் நூபுா் சா்மா.
இறைத்தூதா் முகம்மதுவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படும் சா்ச்சை காரணமாக சில இஸ்லாமிய நாடுகளில் இருந்து எதிா்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடா்புடைய பாஜகவைச் சோ்ந்த தேசிய செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா, கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், அந்தக் கட்சியின் தில்லி ஊடகப் பிரிவுத் தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...