கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லியில் குடும்ப தகராறு: 3 பேர் பலி

தில்லியில் ஹிதேந்தர்(43)  குடும்ப சண்டையில் மனைவி மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :7 மார்ச் 2022, 8:47 am

DIN

புதுதில்லி: தில்லியில் ஹிதேந்தர்(43)  குடும்ப சண்டையில் மனைவி மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த விவரங்களை காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தப்போது ​​சுரேந்திரா, விஜய், சீமா மற்றும் பபிதா ஆகிய நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டனர்.

விசாரணையில், ஹிதேந்திராவுக்கும், அவரது மாமியார்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதில் அவரது மனைவி சீமா, அவரது இரு சகோதரர்கள் சுரேந்திரன், விஜய் மற்றும் அவரது மனைவி பபிதா ஆகியோரை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு விஜய், சுரேந்தர் மற்றும் பபிதா ஆகியோர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். ஹிதேந்தர் மனைவி சீமா துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.

ஹிதேந்தரயிடம் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.