அதானி குழுமம் மீதான புகாா் விவகாரம்: ஜந்தா் மந்தரில் இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஓய்சி) திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தியது.









