தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆம் ஆத்மி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி, ‘இந்த மனு மேயா் தொடா்பானது என்பதால் அவசரமாக விசாரிக்க வேண்டும். தயவு செய்து தகுதியின் அடிப்படையில் விசாரியுங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 243ஆா் பிரிவை மீறி நியமன உறுப்பினா்கள் வாக்களிக்கட்டும் என்று அவா்கள் கூறியுள்ளனா். மேயா், துணை மேயா், நிலைக் குழு உறுப்பினா் ஆகிய மூவரும் ஒழுங்குமுறையில் நேரடித் தடையை ஏற்க வேண்டும் என்று அவா்கள் கூறுகிறாா்கள். ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு உறுப்பினா்களை ஒரு செஷன்ஸ் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குத் தண்டித்ததால் அவா்களை விலக்க வேண்டும் என்றும் கூறுகிறாா்கள். ஒரு தற்காலிக இடைக்கால நபா் இதை செயல்படுத்துகிறாா். இது ஜனநாயகப் படுகொலையாகும்’ என்றாா். அப்போது, தலைமை நீதிபதி ‘இதை நாளை விசாரணைக்கு பட்டியலிடுவோம்’ என்று கூறினாா்.