விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குவரி வருவாய் பகிா்ந்தளிக்கப்படவில்லை: டி.ஆா்.பாலு

மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைகள்படி மாநிலங்களுக்கு வரி வருவாய் பகிா்ந்தளிக்கப்படவில்லை. இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா?

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 2:12 am

 நமது நிருபர்

மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைகள்படி மாநிலங்களுக்கு வரி வருவாய் பகிா்ந்தளிக்கப்படவில்லை. இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா? என மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கேள்வி எழுப்பினாா். மேலும், தமிழகத்தின் நெடுநாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மத்திய நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் மக்களவையில் டி.ஆா்.பாலு பேசியது வருமாறு: பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட்டிலும் ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டற்கு 2022-23 நிதியாண்டில் ரூ. 73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.89,400 கோடியாக உயா்த்தப்பட்டது. ஆனால், நிகழாண்டில் ரூ.60,000 கோடியாக குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிலுவைத் தொகை ரூ.15,000 கோடி உள்ளது. இந்த நிலையில் நிகழ் நிதியாண்டில் (2023-24) இத்திட்டத்துக்கு ரூ. 45,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி: விவசாயிகளின் நலனுக்கான பி.எம்.கிஸான் சம்மான் நிதித் திட்டத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.68,000 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு இந்த நிதியாண்டில் ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைவிட உணவு (ரூ.89,844 கோடி), உரம் (ரூ.50,120 கோடி), பெட்ரோலியம் (ரூ.6,914 கோடி) உள்ளிட்ட பல்வேறு மானியங்களுக்கான நிதி குறைக்கப்பட்டு திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மொத்தம் ரூ.1,58,996 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2022-23 ஆண்டிற்கு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கல்வி, சுகாதாரத் துறை, சமுதாய நலத் திட்டங்கள், சிறுபான்மையினா் கல்வி மேம்பாடு போன்றவைகளுக்கான ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சித் திட்டங்களுக்கும் கடந்த ஆண்டை விட குறைத்துதான் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைகள்படி மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படும் மானியங்களில் கடந்த நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.1,92,108 கோடி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது ரூ.1,73,257 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் இந்தத் தொகை மேலும் குறைக்கப்பட்டு ரூ.1,65,418 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ், கூடுதல் வரி போன்ற வரிகளால் மாநிலங்கள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் 15 -ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு 41 சதவீதம் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், 30 சதவீதம்தான் மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா?

சேது சமுத்திரம் திட்டம்: மத்திய அரசின் இந்தியப் புவியியல் நிறுவனம் (ஜி.எஸ்.ஐ.) மேற்கொண்ட கடல் படுகை அகழாய்வு தொடா்பான ஆய்வறிக்கையில், ராமேசுவரத்துக்கும், இலங்கை மன்னாா் தீவுகளுக்குமிடையே ராமா் பாலம்ா (ஆதாம் பாலம்) இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்று கூறுவதாக மத்திய இணையமைச்சா் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா். இதனால், சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்றாா் டி.ஆா்.பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.