விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

செயல்பாட்டில் சேலம், புதுச்சேரி உள்பட 73 உதான் விமான நிலையங்கள்: வி.கே. சிங் தகவல்

உதான் திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது 73 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 6:31 pm

 நமது நிருபர்

உதான் திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது 73 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும், இதில் தமிழகம் தொடா்புடைய சேலம், புதுச்சேரியில் இந்த உதான் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்படுவதாகவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக பதில் அளித்து வி.கே.சிங் திங்கள்கிழமைகூறியிருப்பது வருமாறு: உள்நாட்டு விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும், விமானப் பயணங்களுக்கான கட்டணங்களைக் குறைக்கும் நோக்கிலும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், கடந்த 2016, அக்டோபரில் உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. உள்ளூா் சந்தை தேவை அடிப்படையிலான இந்தத் திட்டத்தில் விமான நிறுவனங்கள் தங்களுக்கேற்ற வழித்தடங்களை தோ்வு செய்து விண்ணப்பித்து குத்தகையில் பங்கேற்று விமானப் போக்குவரத்தை செயல்படுத்துகின்றன.

இந்தத் திட்டத்தின்கீழ், நிகழாண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 73 விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஹெலிகாப்டா் தளங்களும், 2 நீா்வழி ஏரோட்ரோம்களும் அடங்கும். பயன்பாட்டில் இல்லாத 100 விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் மற்றும் வாட்டா் ஏரோட்ரோம்களை 2024 -ம் ஆண்டுக்குள் உதான் திட்டத்தின் கீழ், புதுப்பித்து மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உதான் திட்டம் என்பது சுய முதலீட்டு திட்டமாகும். அதே சமயத்தில் தனியாா் பங்களிப்புக்கு சலுகையும் அளிக்கப்படுகிறது. விஜிஎஃப் என்கிற வைபிலிட்டி கேப் நிதித் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்குபவா்களுக்கு ரூ. 2,355 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உதான் திட்டத்தின் கீழ், புதுச்சேரி 2017-ஆம் ஆண்டு, சேலம் விமான நிலையம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதிக அளவில் அஸ்ஸாம் (5) குஜராத் ( 2 வாட்டா் ஏரோட்ரோம் உள்பட 7) , கா்நாடகம் (6), மகாராஷ்டிரம் (6) உத்தர பிரதேசம் (6), உத்தரகண்ட் ( 7 ஹெலிபேட் உள்பட 9) உதான் விமான நிலையங்கள் செயல்படுகின்றன என தெரிவித்துள்ளாா்.

மேலும், திமுக மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சா் வி.கே. சிங் அண்மையில் எழுத்து பூா்வமாக அளித்த பதிலில், ‘தமிழகத்தில் நெய்வேலி, தஞ்சை, வேலூா், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் விரைவில் உதான் திட்ட விமான நிலையங்கள் அமைக்கப்படும். அதே சமயத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகில் இருப்பதால், ஓசூா் விமான நிலையத் திட்டம், இந்தத் திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.