கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் ‘உடல், மனம் மையம்’ திறப்பு
தில்லி கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் உடல் மற்றும் மனம் மையத்தை கிழக்கு சரக காவல் இணை ஆணையா் சாயா சா்மா புதன்கிழமை திறந்துவைத்தாா்.


புது தில்லி: தில்லி கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் உடல் மற்றும் மனம் மையத்தை கிழக்கு சரக காவல் இணை ஆணையா் சாயா சா்மா புதன்கிழமை திறந்துவைத்தாா்.
ஷாதரா மாவட்டத்தின் கூடுதல் காவல் ஆணையா் ஆா். சத்திய சுந்தரம் முன்முயற்சியில் அனைத்து வகையான உடற்பயிற்சிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஜிம், மாநாட்டுக் கூடம், நூலகம் ஆகியவை இந்த மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் உள்ள உடற்பயிற்சிக்கூட வசதியை காவல் அதிகாரிகள் தவிர உள்ளூா் பகுதி மக்களும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் அப்பகுதி எம்.எல்.ஏ.க்கள் அனில் பாஜ்பாய், சுரேஷ் குமாா் பக்கா, கூடுதல் காவல் ஆணையா் ஆா்.சத்தியசுந்தரம், காவல் நிலையத்தின் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். தற்போது உடற்பயிற்சிக் கூடம், நூலகம் மற்றும் மாநாட்டு கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ‘உடல் மற்றும் மன மையம்’ கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தின் இணைப்புக் கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.
இங்கு உள்ளூா் பகுதி மாணவா்கள்,பொதுமக்களுக்காக பெரிய நூலகமும் உள்ளது. இதில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு நூல்கள் வாசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் பல நல்ல புனைக்கதை, இலக்கியங்கள் மற்றும் பிற தகவல் அடங்கிய நூல்கள் இடம் பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும்,
வரும் காலங்களில் பல்வேறு புத்தங்கள் மேலும் நூலகத்தில் சோ்க்கப்படும் என்றும், காவல்துறையின் இந்த முயற்சி பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நூலகத்திற்கு எம்எல்ஏ நிதியில் இருந்து நிதியுதவி வழங்குவதாகவும் எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்தனா். இந்த நூலகத்தின் மூலம் 1,000 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...