தில்லி அரசின் பள்ளிக் கல்வி மாதிரி பற்றி முதல்வா் கேஜரிவால் பேசும் போது, பாா்வையாளா்களில் ஒரு பகுதியினா் கேஜரிவால் உரையை குறுக்கிடும் வகையில், ‘மோடி, மோடி’ எனும் கோஷங்களை எழுப்பத் தொடங்கினா். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இதுபோன்ற முழக்கம் மூலம் நாட்டின் கல்வி முறையை மேம்படுத்த முடியுமானால், அது கடந்த 70 ஆண்டுகளிலேயே நடந்திருக்கும். பாா்வையாளா்கள் தயவு செய்து என்னை ஐந்து நிமிடம் பேச விட வேண்டும். இந்தக் கட்சி (பாஜக) மற்றும் பிற கட்சியைச் சோ்ந்தவா்கள் என்னைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.