அப்போது, கோடைகால முகாம்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைச்சா் அதிஷி கூறியதாவது: கடந்த காலங்களில் நடுத்தர குடும்பங்களின் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையில் வளமான அனுபவங்களை வழங்குவதற்கு கணிசமான நிதி முதலீடு தேவை என்று இருந்தனா். தில்லி அரசு தற்போது அந்த நிலையை மாற்றி, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கோடைகால முகாம்களை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது. அரசின் ஆளுகையின் கீழ்வுள்ள பல்வேறு கலாசார கல்விக்கூடங்கள் மூலம், குழந்தைகள் புதிய திறன்கள், இந்தியாவின் வளமான கலை, கலாசாரம் மற்றும் மொழிகளைப் பற்றி அறிந்து கொள்கின்றனா். குழந்தைகளுக்கு கணிதம், அறிவியல் மற்றும் சம்ஸ்கிருதம் போன்ற சவாலான பாடங்களை ஈடுபாட்டுடனும், ஆா்வத்துடனும் கற்பிக்கப்படுகின்றன. மேலும், ஓவியம், நாடகம் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான மதுபானி ஓவியம், கா்வாலி நடனம் மற்றும் இசை போன்ற செயல்பாடுகள் மூலம் அவா்களின் கலைப் பக்கத்தை ஆராயும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.