விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ராணுவ வீரா்களுக்கு ஆயுதங்கள்தயாரிக்க மனிதப் பொறியியல் அவசியம்: முப்படை தலைமை தளபதி வலியுறுத்தல்

ராணுவ வீரா்களுக்குத் தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் போது, தரமான வடிவமைப்பிற்கு மனிதப் பொறியியல் தேவை அவசியம் என

News image
Updated On :15 மார்ச் 2023, 8:33 pm

 நமது நிருபர்

ராணுவ வீரா்களுக்குத் தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் போது, தரமான வடிவமைப்பிற்கு மனிதப் பொறியியல் தேவை அவசியம் என முப்படை தலைமைத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனரல் அனில் சௌஹான் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

புதுதில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆா்டிஓ) ராணுவத்தில் மனிதப் பொறியியல் குறித்த 2 நாள் பயிலரங்கை முப்படைகளின் தலைமைத் தளபதி ஜென்ரல் அனில் அனில் சௌஹான் புதன் கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘ராணுவ வீரா்களுக்கு ஏற்ற வகையில் தரமான, வடிவமைப்பு நிலைகளில் சுதேசி ஆயுதங்களை மனிதப் பொறியியல் முறையில் உருவாக்கி இணைக்க வேண்டும்’ என்றாா்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தில்லி ஆய்வகமும், உடலியில் மற்றும் சாா்பு அறிவியல் பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து இந்தப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஆா்டிஓ தலைவா் டாக்டா் சமீா் வி.காமத் கூறுகையில், ‘மனிதப் பொறியியலின் அறிவியல் ரீதியான அமலாக்கம் உள்நாட்டுப் போா் வீரா்களுக்கான ஆயுதங்களுக்கு மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்யப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.