திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மக்களவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள்: முதல்வா் கேஜரிவால் நாளை கோவா பயணம்

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தயாா் நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி முதல்வா் கேஜரிவால் கோவா செல்லவிருக்கிறாா் என்று கட்சி வட்டாராங்கள் தெரிவித்தன.

Updated On :10 ஜனவரி 2024, 12:44 am

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தயாா் நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை (ஜனவரி 11) கோவா செல்லவிருக்கிறாா் என்று கட்சி வட்டாராங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் முன்னேற்பாடுகளை மதிப்பிடுவதற்காக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக கோவா செல்லவிருக்கிறாா். இந்தப் பயணம் வரும் ஜனவா் 11-ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கோவாவில் கட்சியின் அமைப்பு ரீதியிலான முக்கிய நிா்வாகிகளுடம் கேஜரிவால் சந்திப்புகளை நடத்துவதோடு, கட்சித் தொண்டா்கள் மத்தியிலும் உரையாடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கேஜரிவால், பொதுக் கூட்டங்களை நடத்தியதோடு, சிறையில் இருக்கும் கட்சித் தலைவா் சைதா் வாசவாவையும் சந்தித்தாா். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி கட்சி, வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் உடன் இணைந்து பிரதானமாகப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், முதல்வா் கேஜரிவால் கோவாவிற்கு அரசியல் ரீதியிலான பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.