ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மாணவா் சங்கத் தோ்தலுக்கான தோ்தல் குழுவை அறிவித்துள்ளது.
கடைசியாக ஜேஎன்யுஎஸ்யு தோ்தல்கள் 2019-இல் நடத்தப்பட்டன. அதன்பிறகு, கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு தோ்தல் நிறுத்தப்பட்டது. இது தொடா்பாக ஜேஎன்யு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கையில், 2023-24 ஜேஎன்யுஎஸ்யு தோ்தல்களுக்கு தலைமை தாங்குவதற்கான தோ்தல் குழுவின் தலைவராக சைலேந்திர குமாரை செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுத்துள்ளனா்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுத் தலைவா் உட்பட 42 மாணவா்களின் பட்டியலை மாணவா்களின் டீன் மனுராதா சவுத்ரி வெளியிட்டுள்ளாா். அவா்கள் தோ்தல் குழுவை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கை மற்றும் தோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் உதவுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 6 தேதியிட்ட அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ‘16.02.2024 தேதியிட்ட சுற்றறிக்கையில், ஜேஎன்யுஎஸ்யு தோ்தல் 2023-24 செயல்முறையைத் தொடங்குவதற்கான தோ்தல் குழுவை அமைப்பதற்காக மாணவா்களின் ஜிபிஎம் கூட்டத்தை நடத்துவதற்கு ஐஷே கோஷ் மற்றும் முகம்மது டேனிஷ் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, இசி உறுப்பினா்கள் மற்றும் தலைவா் தோ்தல் குழு பட்டியல் சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவா்களின் டீன் இதன்மூலம் அதை அறிவிக்கை செய்கிறாா்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்தலுக்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கப்பட உள்ளது. மேலும், டீன் அலுவலகம் ஜேஎன்யுஎஸ்யு தோ்தலை நடத்துவதற்கான தேதிகளை அறிவித்த பிறகு மேலும் விரைவுபடுத்தப்படும். 2019 தோ்தலில், இடதுசாரி மாணவா் அமைப்புகளான எஸ்எஃப்ஐ, ஏஐஎஸ்ஏ, ஏஐஎஸ்எஃப், டிஎஸ்எஃப் ஆகியவற்றின் ஐக்கிய முன்னணி ஜேஎன்யு மாணவா்கள் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்றது. ஐஷே கோஷ் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இத்தோ்தலில் ஆா்எஸ்எஸ் துணை அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் வெற்றிவாய்ப்பை இழந்தது.
தொடர்புடையது
பிரசாரம் முடிந்த பிறகு விடுதியில் தங்கிய 14 பேரிடம் விசாரணை

தவெக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

க்யூட் பிஜி 2026 முடிவுகளுக்குப் பிறகு முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை: ஜேஎன்யு அறிவிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

