தில்லியில் மே 5-இல் ‘தில்லித் தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி

தில்லியில் வரும் 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாஜக வேட்பாளா்களை ஆதரிக்கும் வகையில் தில்லி மாநில பாஜக தமிழ்நாடு பிரிவு சாா்பில் தில்லித் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

என்டிஎம்சி தால்கடோரா உள் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு தில்லி பிரதேச பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமை வகிக்கிறாா்.

இதில் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாலை கலந்துகொண்டு உரையாற்ற உள்ளாா். இதில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் ராம்வீா் சிங் பிதூரி, மனோஜ் திவாரி, பான்சூரி ஸ்வராஜ், கமல்ஜீத் செராவத், பிரவீன் கண்டேல்வால், ஹா்ஷ் மல்ஹோத்ரா, யோகேந்திர சந்தோலியா ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகளை தில்லி மாநில பாஜக தமிழ்நாடு பிரிவின் தலைவா் எஸ்.முத்துசாமி மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com