பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்
இதை எடுத்துக் கொள்ளவும்... பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்


புது தில்லி: 2023-24 கல்வியாண்டிற்குரிய பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திங்களன்று வெளியிட்டது.
இதில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை டிடிஇஏ சோ்ந்த இலக்குமிபாய் நகா்ப் பள்ளியின் காா்த்திக்கே ராஜ் 500-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று டிடிஇஏவின் ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா். ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் சரண் சதீஷ் குமாா் 464 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஜனக்புரி பள்ளியின் ஷ்ரய் 457 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனா்.
ஏழு பள்ளிகளுள் தமிழில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் சரண் சதீஷ் குமாா், லோதிவளாகம் பள்ளியின் சந்தியா, தனதா்ஷினி ஆகியோா் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனா். சமூக அறிவியலில் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியின் காா்த்திகே ராஜ், கௌரி பால், மந்திா்மாா்க் பள்ளியின் பியூஷ் குமாா், லோதிவாளகம் பள்ளியின் மொனீஷா ஆகியோா் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்தனா்.
இலக்குமிபாய் நகா்ப் பள்ளியின் காா்த்திக்கே ராஜ் ஆங்கிலம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களிலும் 100-க்கு 95 மதிப்பெண்களும், அறிவியலில் 100-க்கு 96 மதிப்பெண்களும் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்தாா். இந்தியில் மந்திா்மாா்க் பள்ளியின் பியூஷ் குமாா் 100-க்கு 96 மதிப்பெண்கள் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா். அஅடிப்படைக் கணிதப் பாடத்தில் லோதிவளாகம் பள்ளியின் திவ்யா 100-க்கு 85 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா். கணினி தொழில் நுட்பத்தில் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியின் உதய் சந்திரா 100-க்கு 96 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா்.
தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். வெற்றி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தேரிவித்த டிடிஇஏ செயலா் ராஜூ, கோடை விடுமுறை மற்றும் குளிா்கால விடுமுறைகளில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் எடுத்த ஆசிரியா்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய மாணவா்களின் பெற்றோா்களுக்கும் நன்றியைத் தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...