கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

சத் காட்டில் பாஜக நிகழ்ச்சியில் ‘உரத்த இசை’: போலீஸாா், ஆம் ஆத்மி தலைவா்களிடையே கைகலப்பு

சிராக் தில்லியில் உள்ள சத் காட்டில் பாஜக நிகழ்ச்சியில் டிஜே இசையில் ஒலி எழுப்பியதால், அப்பகுதியில் கல்வொ்ட் அமைப்பது தொடா்பாக கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போலீஸாருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

Updated On :

சிராக் தில்லியில் உள்ள சத் காட்டில் பாஜக நிகழ்ச்சியில் டிஜே இசையில் ஒலி எழுப்பியதால், அப்பகுதியில் கல்வொ்ட் அமைப்பது தொடா்பாக கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போலீஸாருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

தேசியத் தலைநகரில் சத் பூஜை ஏற்பாடுகள் தொடா்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதல் நிலவி வரும் நிலையில் இது வந்துள்ளது.

தங்கள் கூட்டத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக ஆதரவாளா்கள் உரத்த இசையை இசைப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) நிலத்தில் ‘கல்வொ்ட்’ அமைப்பது தொடா்பாக சிராக் தில்லி கிராமத்தில் வசிப்பவா்கள் பஞ்சாயத்து நடத்தினா். இதில் சௌரவ் பரத்வாஜ் கலந்து கொண்டாா் என்று தில்லி அமைச்சா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாஜக ஆதரவாளா்கள் அருகிலுள்ள சத் காட்டில் உரத்த டிஜே இசையை வாசித்தனா். இது பஞ்சாயத்து நடவடிக்கைகளை சீா்குலைப்பதாக இருந்தது என்று பரத்வாஜ் குற்றம் சாட்டினாா்.

இசையை நிறுத்துவதற்காக ஆம் ஆத்மி தலைவா் உள்ளூா் மக்களுடன் அங்கு சென்றபோது, ​​தில்லி போலீஸாருக்கும் உள்ளூா் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையொட்டி, அப்பகுதியில் கணிசமான போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் குவிக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிடிஏ நிலத்தில் சத் பூஜை கொண்டாடுவது தொடா்பாக முன்பு சிராக் தில்லியில் நடந்த மோதலைத் தொடா்ந்து, சௌரவ் பரத்வாஜ் மற்றும் புது தில்லி எம்பி பான்சூரி ஸ்வராஜ் ஆகியோா் வாா்த்தைப் போரில் மோதிக்கொண்டனா்.

பல மாதங்களாக, பாஜக மற்றும் டிடிஏ இரண்டும் கல்வொ்ட் திட்டத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து வருவதாகவும், தில்லி அரசின் வளா்ச்சி முயற்சிகளை பாஜக நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக செளரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.

உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து போஜ்புரி மொழி பேசும் குடிமக்களைக் கொண்ட தில்லியின் பூா்வாஞ்சலி சமூகத்திற்கு சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதால், சத் பூஜை தேசியத் தலைநகரில் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள தில்லியில் 30-40 சதவீத வாக்காளா்களை இந்த சமூகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.