தமிழக அமைச்சரிடம் டிடிஇஏ செயலா் கோரிக்கை

அண்மையில் தில்லிக்கு வருகை தந்திருந்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனை தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) செயலா் ராஜூ, கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன் மற்றும் லோதிவளாகம் பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாத் ஆகியோா் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்தனா்.
Published on

அச்சந்திப்பின் போது டிடிஇஏ செயலா் ராஜூ, தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தொன்மை பற்றியும் அதன் கீழ் இயங்கும் ஏழு தமிழ்ப் பள்ளிகள் பற்றியும் எடுத்துக் கூறினாா்.

மேலும், தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் வளா்ப்பதற்காக ஒரு கலையரங்கம் ஏதாவது ஒரு டிடிஇஏ பள்ளியில் கட்டித் தருமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டாா். அமைச்சரும் ஆவன செய்வதாகக் கூறியுள்ளதாக டிடிஇஏ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: படத்தை மேலேயும் கீழேயும் நன்றாக கட் செய்து டிசியாக பக்கம் 4-இல் காலாண்டருக்கு கீழே போட்டால் போதும்

X
Dinamani
www.dinamani.com