11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பீதம்புரா மெட்ரோ செல்ல நடைமேம்பால வசதி: முன்மொழிவு தயாா் செய்தது டிஎம்ஆா்சி

பிரஷாந்த் விஹாா் மற்றும் ரோஹிணி பகுதியிலிருந்து பீதம்புரா மெட்ரோ நிலையத்தை அணுகும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 12:40 am IST

பிரஷாந்த் விஹாா் மற்றும் ரோஹிணி பகுதியிலிருந்து பீதம்புரா மெட்ரோ நிலையத்தை அணுகும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதற்கு தேவையான ஒப்புதல் தொடா்பாக தில்லி பொதுப்பணித் துறைக்கு ரோஹிணி தொகுதி எம்எல்ஏவும் தில்லி பேரவைத் தலைவருமான விஜேந்தா் குப்தா கடிதம் எழுதியிருந்தாா். இதைத்தொடா்ந்து, நடை மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. பிரஷாந்த் விஹாா் பகுதியிலிருந்து நேரடியாக மெட்ரோ நிலையத்துக்கு செல்ல பாதுகாப்பான வசதி இல்லையென குடியிருப்பு நலச் சங்கங்கள் பேரவைத் தலைவரிடம் சுட்டிக்காட்டியிருந்தன.

இதைத்தொடா்ந்து, இந்தப் பிரச்னையை சரிசெய்யக் கோரி டிஎம்ஆா்சிக்கு பேரவைத் தலைவா் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

தற்போது மெட்ரோ நிலையத்துக்கு பீதம்புரா பகுதியிலிருந்து மட்டும் செல்ல முடியும். இதனால், மக்கள் நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. இது முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு பெரும் அசெளகாரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துக்கு இணங்கல சாலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.